Friday, February 20, 2015

நோ மேரேஜ்; இலியானா

No comments :
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது காதல், திருமணம் போன்ற எதைப்பற்றியும வாய் திறக்காமல் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த இலியானா, பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கியபிறகு துணிச்சலாக பேட்டி தரத் தொடங்கினார்.
தனது பாய்பிரண்ட் ஆஸ்திரேலியா போட்டோகிராபரான ஆண்ட்ரூ பற்றிய ரகசியத்தையும் வெளியிட்டார். பெண்கள் மருத்துவ இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள செக்ஸ் உறவு கொள்வது அவசியம் எனவும் பேட்டி அளித்து சர்ச்சையை கிளப்பினார். தற்போது திருமண உறவு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
‘திருமணம் செய்து கொண்டால் வாழும்வரை ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும். திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவியாக சேர்ந்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம். திருமணம் என்பது விமானத்தில் பயணம் செய்வதுபோன்றது. ஒருமுறை விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டால் நடுவழியில் இறங்க முடியாது’ என்றார் இலியானா. திருமணத்தின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் அவர் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன், திருமணத்தில் நம்பிக்கை இல்லை என கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நல்லகாரியம் செய்கிறார் ஸ்ருதி!

No comments :
தந்தை கமல் எவ்வழியோ அவ்வழியில் ஸ்ருதிஹாசன். தனது ரசிகர் மன்றத்தை திடீரென்று கலைத்து, அதை நற்பணி இயக்கமாக அறிவித்தவர் கமல். இப்போது அவரது ரசிகர்கள் நற்பணியில் ஈடுபடுகின்றனர். அதுபோல் ஸ்ருதியும் இறங்கியுள்ளார்.
தனது ரசிகர்கள் வெறும் ரசிப்புத் தன்மையுடன் மட்டும் இருந்தால் போதாது, அவர்கள் நற்பணி யிலும் ஈடுபட விரும்புகிறார். அப்படி ஈடுபட்டவர்கள், தாங்கள் செய்த நற்பணிகளைப் பற்றி தகுந்த ஆதாரத்துடன் அனுப்பினால், அவர்களுக்கு தன் கையெழுத்து போட்ட புகைப்படத்தையும், நன்றிக் கடிதத்தையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார் –

Monday, February 9, 2015

லட்சுமிமேனன் சினிமாவை விட்டு சென்றதற்கு காரணம் பாலியல் தொல்லையா?

No comments :
ரகுவின்டே சொந்தம் ரஸியா, ஐடியல் கப்பில் என இரண்டு மலையாளப்படங்களில் நடித்த நிலையில், சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமிமேனன்.
தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்தார். 18 வயதான லட்சுமிமேனன் தற்போது கொம்பன், சிப்பாய் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நான் சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் லட்சுமிமேனன்.
நிறைய படங்களில் கிராமத்து பெண்ணாகவும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் மாதிரியுமான கேரக்டர்களிலும் நடித்து எனக்கு போரடித்துவிட்டது. தொடர்ந்து எல்லாப்படங்களிலும் அதே போன்ற வேடங்களில் நடிக்கவே எனக்கு வாய்ப்புகளும் வருகின்றன. இது எனக்கு பிடிக்கவில்லை. ஒரே மாதிரி வேடங்களில் நடித்து போரடித்து விட்டது. எனவே தான் சினிமாவில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு இனிமேல் படிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன்.
தற்போது பிளஸ்-2 படிக்கிறேன். தேர்வில் நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும், என்பதே இப்போதைய நோக்கம். ப்ளஸ் டூவுக்குப் பிறகு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்க முடிவு செய்துள்ளேன். அதன்பிறகு ஃபேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன். மறுபடி சினிமாவுக்கு வந்தாலும் நடிகையாக இல்லாமல் ஃபேஷன் டிசைனராக இருக்க ஆசைப்படுகிறேன் என்று லட்சுமிமேனன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அத்தனை எளிதில் யாருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும், நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைந்து முன்னணி நடிகையாகும் அதிர்ஷ்டம் அமையாது. லட்சுமிமேனனுக்கு இதெல்லாம் 15 வயதிலேயே சாத்தியப்பட்டது.
அதுமட்டுமல்ல, படங்களில் நடிக்க பல லட்சங்கள் சம்பளம் வாங்கியதால் தற்போது கோடீஸ்வரியாக இருக்கிறார். இப்படி பணத்தையும், புகழையும் கொடுத்த சினிமாவை லட்சுமி மேனன் உதறுவதற்கு என்ன காரணம்?
படிப்புக்காக என்பதையும், பாவாடை தாவணி போராடித்துவிட்டது என்று அவர் சொல்வதையும் நம்ப முடியவில்லை. ஒருவேளை அவருடன் நடித்த ஹீரோக்கள் கொடுத்த செக்ஸ் தொல்லை காரணமாக மனம் வெறுத்து சினிமாவுக்கு குட்பை சொல்கிறரா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
லட்சுமி மேனன் உடன் இணைந்து நடித்த ஹீரோக்கள் விக்ரம் பிரபு (கும்கி), சசிகுமார் (சுந்தர பாண்டியன், குட்டிப்புலி,), விஷால் (பாண்டிநாடு, நான் சிவப்பு மனிதன்), சித்தார்த் (ஜிகர்தண்டா), விமல் (மஞ்சப்பை), கௌதம் கார்த்திக் (சிப்பாய்), கார்த்தி (கொம்பன்) ஆகிய ஏழு ஹீரோக்கள் தான்.
இவர்களில் யாரோ ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதால் இப்படி ஒரு முடிவை லட்சுமி மேனன் எடுத்தாரா? அல்லது அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், கல்வித் தந்தைகளின் அழைப்புக்கு அஞ்சி நடிப்பே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரா? என துப்பறியும் வேலையை தொடங்கி இருகிறது கோடம்பாக்கம்.

தொடரும் சூர்யா ,அனுஷ்கா ரொமான்ஸ்

No comments :
சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியை அடுத்து மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் சிங்கம் 3 விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் இரண்டு படங்களில் நடித்த ராசியான நடிகையான அனுஷ்காவை மூன்றாவது பாகத்திலும் நடிக்க வைக்க ஹரி முயற்சி செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல் இரண்டு படங்களிலும் சூர்யா-அனுஷ்காவின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதை ஒட்டி மூன்றாவது பாகத்திலும் இருவரும் இணைந்தால் படத்தின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருக்கும் என ஹரியின் தரப்பு கருதுகிறது. மேலும் தற்போது அனுஷ்கா, ருத்ரம்மாதேவி, பாஹுபாலி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது இன்னும் பெயர் வைக்கப்படாத ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் பிரகாஷ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வருட இறுதியில் சிங்கம் 3 படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. , அதற்குள் சூர்யா தற்போது நடித்து கொண்டிருக்கும் மாஸ் மற்றும் விரைவில் ஆரம்பமாகவுள்ள பாண்டிராஜ் படம் ஆகியவற்றை முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.

அதிக திருமணம் செய்த நடிகர், நடிகைகள் யார்? யார்?

No comments :
திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்றாலே பல திருமணம் செய்து கொள்வார்கள், இல்லை திருமணமே செய்து கொள்ளாமல் சுற்றிவிட்டு கடைசியில் பிரேக் அப் என்று சொல்வார்கள். இது இன்று நேற்றல்ல, ஆரம்ப முதலே இருந்து வரும் ஒரு விஷயம் தான்.
இன்று நாம் அப்படி பல திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகள் பற்றிதான் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மூன்று திருமணம் நடந்துள்ளது. அவர் முதலில் தங்கமணியை மணந்தார், அவர் இறந்த பின் இரண்டாவதாக சதானந்தவதி என்பதை மணந்தார். அவரும் நோய் காரணமாக இறந்தார். இறுதியாக தமிழ் நடிகையான வி.என். ஜானகி அவர்களை மணந்தார்.

கமல்ஹாசன்
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ‘லிவ்விங் டு கெதர்’ முறையை தமிழ்நாட்டில் இவர்தான் அறிமுகப்படுத்தினார் என்றே கூறலாம். தனது 24 வயதில் வாணி கணபதி என்பவரை மணந்து, பத்து வருடங்களுக்கு பின் விவாகரத்து செய்துவிட்டு, பின் நடிகை சரிகாவுடன் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஸ்ருதிஹாசன் பிறந்த பின்னர் சரிகாவை மணந்தார். தற்போது கமல்ஹாசன் கௌதமியுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சக்ரவர்த்தியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின் தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவதாக மணந்து வாழ்ந்து வருகிறார்.
லட்சுமி
நடிகை லட்சுமி 1969-ல் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகர் மோகன் சர்மாவை 1975-ல் திருமணம் செய்து, 1980-ல் விவாகரத்து செய்துவிட்டார். பிறகு நடிகரும், இயக்குநருமான கே.எஸ். சிவசந்திரனை காதலித்து 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ராதிகா
நடிகை ராதிகா முதலில் 1985 ஆம் ஆண்டு இயக்குநர் பிரதாப்பை திருமணம் செய்து, 1986-ல் விவாகரத்து செய்துவிட்டார். பின் ரிச்சாட்டு ஹார்டி என்பவரை லண்டனில் 1990 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து, 1992-ல் விவாகரத்து செய்துவிட்டார். இறுதியில் நடிகர் சரத்குமாரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கார்த்திக்
நடிகர் கார்த்திக் 1988-ல் நடிகை ராகினியை மணந்து, பின் ராகினியின் சகோதரியான ரதியை 1992-ல் திருமணம் புரிந்தார்.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்தார். பின் அவர் தனது முதல் மனைவியை 2009-ல் விவாகரத்து செய்துவிட்டு, 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு

No comments :
அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் முதல்நாள்முதலே வசூலிலும், பாக்ஸ் ஆபீசிலும் ஹிட் அடித்துள்ளது. முதல்நாள் வசூலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
‘என்னை அறிந்தால்’ படம் குறித்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் நீளம் குறித்த நெகட்டிவான விமர்சனங்களும் எல்லோர் மத்தியிலும் கேள்வியாக எழுந்துள்ளது. படத்தின் முன்பாதி சற்று நீளமாக இருப்பதால், அதனை கொஞ்சம் குறைத்தால் விறுவிறுப்பாக ரசிக்கும்படியாக இருக்கும் என அனைவரும் கூறியுள்ளதால் படத்தின் நீளத்தை குறைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

Sunday, February 8, 2015

சும்மா இருந்த மாட்டை உசுப்பேத்தி வாங்கிக் கட்டும் போலீஸ் வீடியோ இணைப்பு cow attacked police officers

No comments :

நமிதாவின் புதிய தோற்றம்! மீண்டும் மச்சான்களை தேடி வருகிறார்! வீடியோ இணைப்பு Southindian Namitha's Exclusive Photo Shoot

No comments :

சங்கிலி திருடனை புரட்டி எடுத்த பெண்கள் வேடிக்கை பார்த்த ஆண்கள்! வீடியோ இணைப்பு Chain Snatching captured on CCTV

No comments :

இவனுக்கு எல்லாம் எவன் சாரதி பத்திரம் குடுத்து இருப்பான்? அதிர்ச்சி வீடியோ Drunk driver interrupts friendly chat

No comments :

தன்னுடைய உணவை திருடி தின்ற பன்றியை பந்தாடும் காண்டா மிருகம்! வீடியோ இணைப்பு Rhino kills Wild Boar with Single Horn pulse

No comments :

சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு the Dance floor chennai express

No comments :

ஷமிதாப் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

No comments :
தனுஷுன் இரண்டாவது பாலிவுட் படமான ஷமிதாப் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடித்துள்ளார்.
இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, குறிப்பாக தனுஷ், அமிதாப்க்குமிடையே உள்ள ஈகோ படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக பேசப்பட்டு வருகிறது.
இப்படம் வெளிவந்த முதல் நாள் ரூ 3.5 கோடி வசூல் செய்தது, தற்போது இரண்டு நாள் சேர்த்து இப்படம் ரூ 7.80 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகிறது.

என்னை அறிந்தால் படத்திற்கு விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய விமர்சனம்!

No comments :
என்னை அறிந்தால் படத்தை பார்க்க செல்வோர்களை விட, விமர்சனம் செய்ய செல்பவர்கள் தான் அதிகம். அந்த வகையில் சமூக வளைத்தளமான பேஸ்புக்கில் ஒரு விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய விமர்சனம் ஒன்று வெளிவந்துள்ளது. தற்போது இந்த விமர்சனம் தான் அதிக ஷேர் ஆகி வருகிறது.

விஜய் ரசிகனின் விமர்சனம்:

என்னை அறிந்தால் படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அஜித் என்றால் நம்பிக்கை, உழைப்பு, அபாரம், அழகு. பக்தன் கடவுள் மேலே வைத்துள்ள அன்பை விட ரசிகன் நடிகன் மீது வைத்துள்ள அன்பு பன்மடங்கு பெரியது, பக்தன் கூட கைமாறு கருதி அன்பு வைக்கிறான்… ஆனால் இவர்கள் எதையும் எதிர்பாராமல் வைக்கின்றனர்.

இந்த நடிகன், ரசிகனுக்கு இடையே உள்ள அன்பை புரிந்துகொள்ள நீங்கள் முதல் நாள் முதல் காட்சி போய் பாருங்கள் புரியும்.  நான் பார்த்தேன் படத்தை மட்டுமல்ல அஜித்தின் பக்தர்களையும், படத்திற்க்கு மதிப்பெண் போடலாம். பக்தர்களின் அன்புக்கு முடியாது. சின்ன வேண்டுகோள், பாலபிசேகம் செய்து உங்கள் அன்பை காட்டாதிர்கள், பதிலாக அந்த பாலை அனாதை குழந்தைகளுக்கு கொடுங்கள். அஜித் அவர்களும் இதைதான் விருபுவார். இது விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்துதான்…

இப்படிக்கு விஜய் ரசிகன்…. என்று தன் விமர்சனத்தை அட்வைஸுடன் முடித்துள்ளார்.

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் அஜித் ராஜ்ஜியம்! முழு விவரம்

No comments :
அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தற்போது என்னை அறிந்தால் அமெரிக்காவில் 3 நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் 04.02.2015 பிரிமியர் ஷோவில் $113K, 05.02.2015 அன்று $120K, 06.02.2015 அன்று $129K வசூல் செய்துள்ளதாம்.
இதுவரை மொத்தம் $415k வசூல் செய்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 2.58 கோடி வசூலானது என கூறப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல படத்தின் வசூலை இப்படம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறப்படுகிறது.

நடிக்க வேண்டும் என்றால் படுக்க அழைப்பார்கள் : நடிகை ஆதங்கம்

No comments :
மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த்-2 போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுர்வீன் சாவ்லா. இவர் தமிழை தவிர இந்தியிலும், தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் பாலிவுட்டில் ’ஹேட் ஸ்டோரி-2’ என்ற படத்தில் பயங்கர செக்ஸியாகவும், கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பேட்டி அளிக்கையில், பட வாய்ப்பு தருவதாகக் கூறி, படுக்கைக்கு அழைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு சிலர் கேட்பதையும், அதை அவர் சமாளிப்பதையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிக்க வந்து நான் இங்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக வேறு மாதிரி ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளச் சொன்னவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம்.
ஆனால் இப்போது நான், அநாகரிக விண்ணப்பங்களை என் போக்கில் எப்படிக் கையாளுவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். திரையுலகில் ஒரு நடிகர் அல்லது நடிகையின் திறமையைப் புரிந்து அதற்கேற்ற பாத்திரங்களைத்தான் தருகிறார்கள். வெறும் கவர்ச்சி மட்டும் காட்டச் சொன்ன பல வாய்ப்புகளை நான் நிராகரித்திருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

Thursday, February 5, 2015

மது வாங்கும் காட்சி விவகாரம்: சர்ச்சையில் நயன்தாரா பிரியா ஆனந்த் ஆவேசம்…

No comments :
நயன்தாரா நடிக்கும் படம் ‘நானும் ரவுடிதான்’ . இப்படத்துக்காக மது கடைக்கு சென்று மது வாங்கும் காட்சியில் நடித்தார் நயன்தாரா. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சிக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மது கடையில் ஒரு பெண் மது வாங்குவதுபோல் காட்டுவது பெண்களை
இது குறித்து நயன்தாரா கூறும்போது, ‘இது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. அவ்வளவுதான்’ என குறிப்பிட்டார். பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘எதற்காக இவ்வளவு பெரிய விஷயமாக இதை மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.
இழிவுபடுத்துவதுபோல் உள்ளது. குறிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நயன்தாராவை குறிவைத்து இதுபோல் போராட்டம் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காட்சிக்கு ஏற்றபடி இயக்குனர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைத்தான் நடிகர், நடிகைகள் செய்கின்றனர். அதுபோல் இதுவும் ஒரு காட்சி அவ்வளவுதான். இயக்குனர்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது. இக்காட்சி ஏன் இடம்பெறுகிறது என்பதை படம் பார்த்தால் தெரியவரும்‘ என்றார்.இது பற்றி கருத்து தெரிவித்த நடிகை பிரியா ஆனந்த், ‘சம்பளம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்கிறோம். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் வேலை. சிகரெட் பிடிப்பதுபோல் நடித்தால் உடனே அந்த நடிகை நிஜத்திலும சிகரெட் பிடிப்பார் என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட காட்சி ஏன் படத்தில் இடம்பெறுகிறது என்பது படம் பார்க்கும்போது புரியும்’ என்றார்.

என்னை அறிந்தால் படம் பற்றி சிம்புவின் வித்தியாசமான ட்வீட்…

No comments :
அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் படம் என்னை அறிந்தால்.
இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரபலங்களில் சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகன் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இன்று படத்தை பார்த்த சிம்பு, ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன்.
தல அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர் முடிவு…

No comments :
ரஜினிகாந்த் பெயரிலான பட தலைப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் பட தயாரிப்பாளர்.தமிழில் பல்வேறு
படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் ஆதித்ய மேனன். இவர் நடிக்கும் இந்தி படம் ‘மைன் ஹுன் ரஜினிகாந்த்‘. பைசல் சைப் இயக்கி உள்ளார். இப்படத்தை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எனது இமேஜையும், மக்களிடம் எனக்குள்ள மரியாதையையும் கெடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கிளிப்பிங்க்ஸ், தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை பார்த்தபோது இந்த விவரம் தெரியவந்தது. எனவே இப்படத்துக்கு என் பெயரை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’ என கேட்டிருந்தார். அதை ஏற்று படத்துக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கில் ரஜினிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி இயக்குனர் பைசல் சைப் கூறியதாவது:இப்படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்பவே படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது. கதையும் ஹீரோவை சுற்றியே நகர்கிறது. ஒரு இயக்குனர் கதாசிரியராக ரஜினியின் மனதை மேலும் புண்படுத்த நான் நினைக்கவில்லை. படத்தின் தலைப்பை மாற்றவே நான் நினைக்கிறேன். ஆனாலும் பட தயாரிப்பாளர் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் எடுத்து செல்ல விரும்புகிறார். அதை என்னால் தடுக்க முடியாத நிலை உள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த மோதலை தொடர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

இந்திக்கு போகிறார் ஷங்கர் …

No comments :
ஐ’ படத்தை அடுத்து இந்தியில் படம் இயக்க இருக்கிறார் ஷங்கர்.இயக்குனர் ஷங்கர், அவர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். தமிழில்
அர்ஜுன் நடிப்பில் ஹிட் ஆன இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அனில் கபூர், ராணி முகர்ஜி ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தை அடுத்து இந்திப் படம் இயக்கவில்லை. பிறகு ‘ரோபோ’ படத்தை ஷாரூக்கான் நடிப்பில் இயக்க இருந்தார். இதில் இரண்டு பேருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்பட்டது. அடுத்து அந்தக் கதையை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ‘எந்திரன்’ என்று இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதை அடுத்து விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ‘ஐ’ படத்தை இயக்கினார். ‘இந்தப் படத்தை அடுத்து இந்தியில் படம் இயக்க இருக்கிறார் ஷங்கர். பெரிய பட்ஜெட் என்பதால் தமிழில் அதற்கான தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். அதனால் இந்தியில் இயக்க இருக்கிறார். மற்ற விஷயங்கள் இன்னும் சில மாதங்களில் தெரியும்’ என்று ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது.