Monday, February 9, 2015
என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு
அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் முதல்நாள்முதலே வசூலிலும், பாக்ஸ் ஆபீசிலும் ஹிட் அடித்துள்ளது. முதல்நாள் வசூலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
‘என்னை அறிந்தால்’ படம் குறித்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் நீளம் குறித்த நெகட்டிவான விமர்சனங்களும் எல்லோர் மத்தியிலும் கேள்வியாக எழுந்துள்ளது. படத்தின் முன்பாதி சற்று நீளமாக இருப்பதால், அதனை கொஞ்சம் குறைத்தால் விறுவிறுப்பாக ரசிக்கும்படியாக இருக்கும் என அனைவரும் கூறியுள்ளதால் படத்தின் நீளத்தை குறைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment