Monday, February 9, 2015

அதிக திருமணம் செய்த நடிகர், நடிகைகள் யார்? யார்?

No comments :
திரையுலகத்தைச் சேர்ந்தவர் என்றாலே பல திருமணம் செய்து கொள்வார்கள், இல்லை திருமணமே செய்து கொள்ளாமல் சுற்றிவிட்டு கடைசியில் பிரேக் அப் என்று சொல்வார்கள். இது இன்று நேற்றல்ல, ஆரம்ப முதலே இருந்து வரும் ஒரு விஷயம் தான்.
இன்று நாம் அப்படி பல திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகள் பற்றிதான் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மூன்று திருமணம் நடந்துள்ளது. அவர் முதலில் தங்கமணியை மணந்தார், அவர் இறந்த பின் இரண்டாவதாக சதானந்தவதி என்பதை மணந்தார். அவரும் நோய் காரணமாக இறந்தார். இறுதியாக தமிழ் நடிகையான வி.என். ஜானகி அவர்களை மணந்தார்.

கமல்ஹாசன்
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ‘லிவ்விங் டு கெதர்’ முறையை தமிழ்நாட்டில் இவர்தான் அறிமுகப்படுத்தினார் என்றே கூறலாம். தனது 24 வயதில் வாணி கணபதி என்பவரை மணந்து, பத்து வருடங்களுக்கு பின் விவாகரத்து செய்துவிட்டு, பின் நடிகை சரிகாவுடன் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தார். ஸ்ருதிஹாசன் பிறந்த பின்னர் சரிகாவை மணந்தார். தற்போது கமல்ஹாசன் கௌதமியுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி, நடிகர் சக்ரவர்த்தியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பின் தயாரிப்பாளர் போனி கபூரை இரண்டாவதாக மணந்து வாழ்ந்து வருகிறார்.
லட்சுமி
நடிகை லட்சுமி 1969-ல் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு, நடிகர் மோகன் சர்மாவை 1975-ல் திருமணம் செய்து, 1980-ல் விவாகரத்து செய்துவிட்டார். பிறகு நடிகரும், இயக்குநருமான கே.எஸ். சிவசந்திரனை காதலித்து 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ராதிகா
நடிகை ராதிகா முதலில் 1985 ஆம் ஆண்டு இயக்குநர் பிரதாப்பை திருமணம் செய்து, 1986-ல் விவாகரத்து செய்துவிட்டார். பின் ரிச்சாட்டு ஹார்டி என்பவரை லண்டனில் 1990 ஆம் ஆண்டு திருமணம் புரிந்து, 1992-ல் விவாகரத்து செய்துவிட்டார். இறுதியில் நடிகர் சரத்குமாரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கார்த்திக்
நடிகர் கார்த்திக் 1988-ல் நடிகை ராகினியை மணந்து, பின் ராகினியின் சகோதரியான ரதியை 1992-ல் திருமணம் புரிந்தார்.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் லலிதா குமாரி என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்தார். பின் அவர் தனது முதல் மனைவியை 2009-ல் விவாகரத்து செய்துவிட்டு, 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் போனி வெர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

No comments :

Post a Comment