Monday, January 12, 2015
விடிய விடிய குடி! : பார்ட்டியுடன் நிச்சயதார்த்தத்தை கொண்டாடும் த்ரிஷா
ஒருவழியாக வருண்மணியனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்கிற சீக்ரெட் தகவலை சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டரில் அறிவித்து விட்டார் நடிகை த்ரிஷா.
இந்த மாதம் 23- ஆம் தேதி த்ரிஷா – வருண்மணியன் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த வருடத்துக்குள் அவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்தம் அன்று எந்த தேதியில் திருமணம் நடைபெறும் என்கிற தகவல் அறிவிக்கப்படும்.
முன்னதாக தனது நிச்சயதார்த்தத்துக்கு நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்திருக்கும் த்ரிஷா இது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றும் இதில் மற்றவர்களுக்கு இடமில்லை என்றும் நாசுக்காக தெரிவித்திருக்கிறார்.
அதே நேரம் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தனது நண்பர்களை விட்டு விட முடியுமா என்ன?
அவர்களுக்காக ஒரு மிகப்பிரம்மாண்டமான சரக்கு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் த்ரிஷா.
23-ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்ததும் அடுத்த நாள் 24-ம் தேதி சென்னையிலுள்ள 7 ஸ்டார் ஹோட்டலான ஐடிசி கிராண்ட் சோழாவில் மிகப்பிரம்மாண்டமான பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் கலந்து கொள்ள சினிமா உட்பட எல்லா மட்டத்திலும் உள்ள தனது நண்பர்களுக்கு ஸ்பெஷலாக இன்வைட் அனுப்பியிருக்கிறார் த்ரிஷா.
இப்படித்தான் த்ரிஷாவின் திருமணம் களைகட்டப் போகிறது…
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment