Monday, January 12, 2015

ஏ.ஆர்.ரஹ்மான் மீது வருமான வரித்துறை வழக்கு?

No comments :
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதுவரை வருமான வரி சிக்கலில் மாட்டாத ரஹ்மான் முதன்முதலாக வருமான வரித்துறையினர்களின் வழக்கில் சிக்கியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க மொபைல் நிறுவனம் ஒன்றுக்கு ரிங்டோன் அமைத்த கொடுத்த பணிக்காக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த மொபைல் நிறுவனம் ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டேஷன்’ என்ற டிரஸ்டுக்கு மணி டிரான்ஸ்பர் செய்ததாகவும், ஆனால் அந்த டிரஸ்ட் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் அனுமதியை அரசிடம் இருந்து பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ரஹ்மானின் ஆடிட்டர் அந்த பணத்தை தேசிய வங்கி ஒன்றில் பிக்சட் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறை ஏ.ஆர்.ரஹ்மான் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments :

Post a Comment