Monday, January 12, 2015
கோடிக்கணக்கில் நஷ்டம் வரும்! : ஐ தயாரிப்பாளருக்கு வந்த எச்சரிக்கை
இன்றைக்குக் கூட காலைப் பேப்பரைத் திறந்தால் ‘ஐ’ படம் ஜனவரி 14-ல் ரிலீஸ் என்று விளம்பரம் சொல்கிறது.
‘ஐ’ படத்திற்கு நீதிமன்றம் 30ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து நேற்று தீர்ப்பளித்ததால் திட்டமிட்டபடி படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற கேள்வி எழுந்தது.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் ‘ஐ’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் 30 கோடி ரூபாய் கடன் வாங்கி, சொன்ன தேதியில் கடனைத் திருப்பித் தராததால் அந்த நிறுவனம் ரவிச்சந்திரன் மீது வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘ஐ’ படத்தை இந்த மாதம் 30ம் தேதி வரை வெளியிடத் தடை விதித்து தீர்ப்பளித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் “என்மேல் வழக்கு தொடுத்தவர் என்னுடைய நண்பர் தான். அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். கண்டிப்பாக இதில் சமரசம் ஏற்பட்டு விடும். அதனால் திட்டமிட்டபடி ஐ படம் பொங்கலுக்கு ரிலீசாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக ஐ படத்துக்கு தடை என்று கேள்விப்பட்டவுடன் அப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலரும் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ஐ திரைப்படத்தின் ரிலீஸ் 3 வாரம் தள்ளிப் போனால் பலருக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். அதனால் எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்யுங்கள் என்று எச்சரித்தார்களாம்.
இப்பெல்லாம் பிரச்சனை இல்லாமல் எந்தப் பிரம்மாண்டப்படங்களும் ரிலீசாகாது போலிருக்கு…
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment