Tuesday, January 20, 2015

உண்மையான சூப்பர் ஸ்டார் விஜய்யா? – சரத்குமார் விளக்கம்

No comments :
ரஜினியை அடுத்து, சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கைப்பற்றுவது யார் என்று சில மாதங்களுக்கு முன்பு, முன்னணி பத்திரிக்கை ஒன்று கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக அறிவித்தது.

இதனால் பல பிரச்சனைகள் அப்பொழுது எழுந்தது. காலப்போக்கில் அப்பிரச்சனை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்துவிட்டது.
தற்போது தனியார் தொலைக்காட்சியில் பங்குபெற்ற சரத்குமார், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார் . சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் கிடையாது. ஒருவர் மறைந்த பிறகும் அவரை பற்றி நாம் பேசினால் அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.
விஜய் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று நான் சூரியவம்சம் படத்தின் விழா அன்றே எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கூறியதாகச் சொன்னார்.
இது ஒரு பெரிய பட்டம் கிடையாது. காந்தி, வல்லபாய் பட்டேல், காமராஜ், எம்.ஜி.ஆர் இவர்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்கின்றனர். இவர்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் எனக் கூறினார்.

No comments :

Post a Comment