Tuesday, January 20, 2015

டவுட்டே வேணாம் : 29 ம் தேதி என்னை அறிந்தால் கன்பார்ம் ரிலீஸ்

No comments :
அஜித்துடன் கெளதம் மேனன் முதல்முறையாக இணைந்திருக்கும் படம் தான் என்னை அறிந்தால்.

கடந்த 14-ம் தேதி பொங்கலுக்கு இப்படம் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்று ரிலீஸ் தேதி ஜனவர் 29-ம் தேதி என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி அஜீத் படம் போட்டியின்றி சோலோவாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரசிகர்கள் அன்றைய தினம் படம் வரும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
ஆனால் என்னை அறிந்தால் பட விளம்பரங்களில் விரைவில் படம் ரிலீசாகும் என்றே குறிப்பிடப்படுகிறது. தேதி இடம் பெறவில்லை. எனவே படம் மீண்டும் தள்ளிப்போகலாம் என வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால் என்னை அறிந்தால் படத்தின் போஸ்ட் பொரொடக்‌ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகி்றது. வருகிற 21-ம் தேதி படத்தை சென்சாருக்கு அனுப்பப் போகிறோம். திட்டமிட்டபடி 29-ம் தேதி என்னை அறிந்தால் படம் ரிலீசாகி விடும். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

No comments :

Post a Comment