Tuesday, January 27, 2015

இதைத்தான் நேரம்கிறது… : டம்மி ஹீரோயின்களை தேடிப்போகும் சந்தானம்

No comments :
சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்க யாரும் தடை சொல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் கையில் பணத்தோடு வரும் யார் வேண்டுமானாலும் சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து ஹீரோவாக நடிக்கலாம்.
அப்படி வருகின்ற புதுமுகங்களுக்கு ஹீரோயின்கள் புதுமுகங்களாக இருந்தால் அது விஷயமே இல்லை.
ஆனால் ஏற்கனவே காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் வடிவேலு, சந்தானம் போன்றவர்களுக்கும் புதுமுகங்களை ஜோடியாக்க வேண்டிய கட்டாயம் அவர்களை ஹீரோவாகப் போட்டு படமெடுக்கும் இயக்குனர்களுக்கு ஆகி விடுகிறது.
வடிவேலு ஹீரோவான போது அவருடன் ஜோடியாக நடிக்க எந்த முன்னணி நடிகையும் தயாராக இல்லை. இதனால் இரண்டாம், மூன்றாம் லெவல் நடிகைகளை ஜோடியாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்போது அதே நிலைமை தான் வடிவேலு விட்ட இடத்தை பிடித்திருக்கும் சந்தானத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.
சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு அவரை காமெடிக்கு எந்த ஹீரோவும் கூப்பிடுவதில்லை. சக போட்டியாளராகத்தான் அவரை பார்க்கிறார்கள். இதனால் அவருடைய வாய்ப்புகள் எல்லாமே சூரிக்கு போகிறது.
சந்தானம் அசரவில்லை. இனி ஹீரோவாகத்தான் நடிப்பது என்று தனது முடிவில் தெளிவாக இருக்கிறார்.
ஆனால் அவருக்கு முன்னணி ஹீரோயின்கள் யாருமே நடிக்க முன் வராதது தான் கொடுமை.
இதனால் ஏற்கனவே முன்னணி ஹீரோக்களுடன் ஒன்றிரெண்டு படங்களில் ஜோடி போட்டு இப்போது பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும் சில நடிகைகளை தேடிப்போக ஆரம்பித்திருக்கிறார் சந்தானம்.
அவரது தேடலுக்கும் பலன் கிடைக்காமல் இல்லை.
ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.ராஜேஷ் அடுத்து வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். இதில் ஆர்யா தான் ஹீரோ என்றாலும் இன்னொரு ஹீரோ போலவே வருகிறார் சந்தானம்.
இதனால் படத்தில் அவருக்கு ஒரு ஜோடி தேவைப்பட்டது. பல முன்னணி நடிகைகளை கேட்டுப்பார்த்தும் யாருமே ஓ.கே சொல்லவில்லை. கடைசியாக விஷால் ஜோடியாக தாமிரபரணி படத்தில் நடித்த பானு சந்தானம் ஜோடியாக நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறார்.

No comments :

Post a Comment