Tuesday, January 27, 2015
ஓ… அவரு தான் இவரா…? : ரம்யா நம்பீசனை மயக்கிய தயாரிப்பாளர்
ஜே.எஸ்.கே சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் செவன் சிஸ் என்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் முடியும் தருவாயை
எட்டியுள்ளது. ஸ்ரீகிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்.
“ ‘நாலு போலீசும் நல்ல இருந்த ஊரும்’ ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் கற்று கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு நன் ஒரு கிராமத்து சாயலில் ஒரு கேரக்டர். நான் இவ்வகையான நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நெடு நாளாய் காத்திருந்தேன். இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இந்த கதையை கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, சற்றும் யோசிக்காமல் நான் நடிக்க ஒப்பு கொண்டேன்.” என்றார் ரம்யா.
“ இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பல நல்ல படங்களை தயாரித்துள்ளனர். ஜே.எஸ்.கே சார் இப்படத்தை தயாரிக்கின்றார் என்று தெரிந்ததும் மிக மகிழ்ச்சியாய் இருந்தது. படங்களை அவர் தேர்ந்தெடுக்கும் விதமும் அப்படங்களை அவர் திரைப்பட விழாக்கள், விருதுகள் என வெவ்வேறு இடத்திற்கும் இட்டு செல்லும் விதமும் கண்டு நான் வியந்துள்ளேன்.
“ அருள்நிதியுடன் நடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. பெரிய சினிமா பின்புலம் கொண்ட நடிகர் எனினும், அவர் அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்வார். இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்புகள் சற்று தடுமாற்றமே அத்தகைய நேரங்களில் பேருதவி புரிந்துள்ளார்.“
அவரது பாடல் அனுபவம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் பற்றி கேட்டபோது “ இப்படத்தில் ‘காதல் கனிரசம்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்பாடல் வண்ணமயமாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நான் எந்த பாடலும் பாடவில்லை. மேலும், மலையாளத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் உள்ளது. நேரம் கூடினால் கண்டிப்பாக செய்வேன் “ என்று கூறினார்
“ இப்படத்தில் வாய்ப்பளித்த எனது தயாரிப்பாளர்களுக்கு, இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். இப்படம் அனைவரையும் சிரிக்க வைக்கும், முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.” என தனது பிடித்தமான காதல் கனிரசம் பாடலை முணுமுணுத்தவாரே விடை பெற்றார் ரம்யா.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment