Friday, January 9, 2015
நயன்தாராவும் கவுண்டமணியும் அந்த விஷயத்தில் ஒரே மாதிரிதான்..!
கவுண்டமணி தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக, நடித்துக் கொண்டிருக்கிறார் . ஒரு காலத்தில் தமிழ்சினிமா ரசிகர்களை திகட்ட திகட்ட சிரிக்க வைத்தவர் இவர்.
அதன் பின் நீண்ட காலமாக தமிழ் சினிமாவுக்கு இளைவெளி கொடுத்து, தள்ளியே இருந்தார். அவர் ஏன் திடீர் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார் என்பதற்கு முறையான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.
அவர் நடித்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயாராகிவிட்டன. இந்த நிலையில்தான், பிரஸ்சை மீட் பண்ணி பிரமோஷனை ஆரம்பிக்கலாமா என்று கேட்டாராம்.
பொதுவாக அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் பேட்டியோ, பிரஸ்மீட்டோ என்றால் அந்த இடத்தில் கவுண்டரை பார்க்கவே முடியாது.
நான் என்னத்தை செஞ்சுட்டேன்னு எங்கிட்ட பேட்டிக்கு வர்றீங்க? போய் விவசாயியை போட்டியெடுங்க. தொழிலாளியை பேட்டியெடுங்க? நான் என்னத்தைப்பா செஞ்சுட்டேன் என்று கழன்று கொள்வார். காலம் கவுண்டரை மாற்றிவிடுமா என்ன? மீண்டும் அதே வீராப்புடன்தான் இருக்கிறாராம்.
தம்பி… நான் அங்கெல்லாம் வந்து பேட்டி கொடுக்க மாட்டேன். படத்தை பார்த்துட்டு அது நல்லாயிருந்தா நல்லாயிருக்குன்னு எழுத சொல்லு. இல்லேன்னா நார் நாரா கிழிக்க சொல்லு. என்னைய ஆட்டத்துல இழுக்கலாம்னு மட்டும் நினைக்காதிங்க.. என்று கூறிவிட்டாராம்.
அதே போல் தான், நயன்தாராவும் எந்த படத்தின் பிரஸ் மீட்டிலும் கலந்து கொள்வது இல்லை. எனவே தான், இந்த விஷயத்தில் கவுண்டமணியும், நயன்தாராவும் ஒன்னு என்று கூறுகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment