Friday, January 9, 2015

என்னை அறிந்தால் தள்ளிப்போட்டதுக்கு உண்மையான காரணம் இதுதானா..!

No comments :
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பரவி வரும் ஒரு யூகம் அஜீத்தின் இமேஜ் கெடுக்கிறது. அஜித்தின் என்னை அறிந்தால் படம், மதுரை பிரமுகர் ஒருவருக்காக பயந்துதான் தள்ளிப் போட்டதாகவும், அந்த பிரமுகர் ஐ படத்தை வெளியிடுவதால் இந்த மிரட்டல் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இதை பற்றி ‘என்னை அறிந்தால்’ வட்டாரத்தில் விசாரித்த பொழுது, ‘தினம் ஒரு வதந்தி பரவி வருவதை நாங்களும் படிச்சுட்டு சிரிச்சுகிட்டுதான் இருக்கோம்’ என்கிறார்கள். மேலும், ‘உண்மையில் நடந்ததே இதுதான்’ என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாகவே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நின்று நிதானமாக வேலை பார்க்கிறவர். இந்த முறை அவருக்கு அனேகன் படமும் சேர்ந்து கொண்டது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வேலை வாங்குவதால், எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்கிற குழப்பம் அவருக்கு உள்ளதாம். கடைசி நேரத்தில் அவர் மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறார். எல்லா பாடல்களும் லண்டனில் தான் ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருகிறோம்.
அங்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், லண்டனில் வேலை செய்யும் ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர்.
இந்த விடுமுறையே சுமார் ஒரு வார காலம் நேரத்தை கடத்தியதால், வேறு வழியில்லாமல் படத்தின் வெளியீட்டை தள்ளிப் போட வேண்டியதாயிற்று, என்றனர் படக்குழுவினர்.
29ந் தேதிதான் படம் ரிலீஸ் என்பதால், எடுத்த காட்சிகளை இன்றும் சிறப்பாக மெருகேற்ற, பேட்ச் வொர்க் என்று சொல்லப்படும் செய் நேர்த்தி காட்சிகளை கடந்த வாரம் வரைக்கும் கூட ஷுட் பண்ணியிருக்கிறார் கவுதம் மேனன்.
ஹாரிஸ் ஜெயராஜ் இதுவரை இல்லாதளவுக்கு இந்த முறை அனேகன், என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். கீழ் தளத்தில் ஒரு படமும், மேல் தளத்தில் ஒரு படமும் என்று இந்த பணியை ஓடி ஓடி செய்து கொண்டிருக்கிறார் ஹாரிஸ்.

No comments :

Post a Comment