Monday, January 5, 2015
சிம்புவின் காதல் வலையில் சிக்குவாரா லக்ஷ்மி மேனன்..?
தமிழ் சினிமாவில் ஆச்சரியமான விசயங்கள் நடப்பது சகஜம். ஆனால், சிம்புவுக்கு சினிமாவை விட, நிஜ வாழ்க்கையில் தான் பல்வேறு சுவாரஸ்யமான விசயங்கள் நடக்கின்றன.
நயன்தாரா, ஹன்சிகா என தொடர்ச்சியான காதல் தோல்விகளுக்கு பிறகு, இப்போதுதான் அவர் படம் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அவருடைய நடிப்பில் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
இந்தநிலையில், பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்திற்காக சிம்புவும், லக்ஷ்மி மேனனும் இணைந்து ‘டெசி கேர்ள்’ என்ற பாடலை பாடியுள்ளனர். தெலுங்கு சூப்பர்ஹிட் படமான ‘ஜூலாயி’ படத்தின் ரீமேக்கான இப்படத்திற்காக தமன் இசையமைத்து வருகிறார். சிம்புவின் படம் விரைவில் வருகிறதோ இல்லையோ, இந்த ‘டெசி கேர்ள்’ மிக விரைவில் வெளியாகி ஹிட்டாகும் என எதிர்பார்க்கலாம் என திரையுலகில் பேசிக்கொள்கின்றனர்.
சிம்புவுடன் எந்த நடிகை ஜோடி சேந்தாலும் கிசுகிசுவுக்கு பஞ்சம் இருக்காது. நயன்தாரா, ஹன்சிகா படத்தில் காதலிப்பது போல் நிஜத்திலும் காதலில் விழுந்தனர். தற்போது லக்ஷ்மி மேனன் சிம்புவுடன் இணைத்து பாட்டு பாடியுள்ளார், நிஜ வாழ்க்கையில் பாடாமல் இருந்தால் சரி தான் என கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment