Wednesday, January 7, 2015
எப்படி இருந்த சிம்பு! இப்படி ஆயிட்டாரே..?
சிம்பு சோலோ ஹீரோவாக நடித்த போடா போடி படம் கடந்த 2012 ஆம் ஆண்டு ரிலீசானது. அதன்பிறகு 2 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் அவர் பேர் சொல்ல ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.
நடிக்க வந்த புதிதில் அவரை வைத்து படமெடுத்த அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் சிம்பு கொடுத்த டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சமில்லை. காலை 7 மணியிலிருந்து மொத்த யூனிட்டும் சிம்புவுக்காக காத்துக்கொண்டிருக்கும். சாயங்காலம் 6 மணி வாக்கில் ஹாயாக வருபவர் இன்னைக்கு எனக்கு மூடு சரியில்ல, அதனால ஷூட்டிங்கை நாளைக்கு வெச்சுக்கலாம் என்று சொல்லிவிட்டு பறந்து விடுவார். வந்தவர்களுக்கு வேலையே இல்லாமல் முழுச்சம்பளத்தை கொடுத்து அனுப்புவார்கள் தயாரிப்பாளர்கள்.
இப்படி படப்பிடிப்புக்கே வராமல் டிமிக்கி கொடுத்து வீணாக்கியதன் பலனைத் தான் இப்போது படமே இல்லாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு.
இடையில் நயன்தாரா காதல் தோல்வியைத் தழுவியதும் ஹன்ஷிகா சிக்கினார். அவருடனாக காதல் ப்ரேக்கப் ஆனதும் தான் வலியை தாங்க முடியவில்லை சிம்புவுக்கு.
பெரிய பாறாங்கல்லைத் தூக்கி மனசுக்குள்ள போட்டா மாதிரி அப்படி ஒரு மரண வலியோடு புலம்பினார்.
அதிலிருந்து விட்டுவிலக ஆன்மீகத்துக்குள் தன்னை அடைத்துக் கொண்டவர் ஹரித்வார், ரிஷிகேஷ் என மலைப்பிரதேசங்களை பயணம் சென்றார்.
திரும்பி வந்தபிறகு எந்த டிவியில் பேசினாலும் இந்த உலகமே ஒரு மாயை, மனிதர்கள் எல்லாம் பொய் என்று ஆன்மீக வியாபாரிகளைப் போலவும், ஒரு தத்துவ ஞானி போலவும் பேச ஆரம்பித்தார்.
அதை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார் சிம்பு.
கடந்த 2 வருடங்களாக சிம்புவுக்கு பேர் சொல்ல ஒரு படம் கூட ரிலீசாகவில்லை என்றாலும் இந்த 2015 ஆம் ஆண்டில் வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு என மூன்று படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன.
இதில் ஒரு படத்தையாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் அவர்
”கடவுள் இந்த உலகத்துல மனுஷனைப் படைச்சான்,
ஆனா மனுஷன் இந்த உலகத்துல கடவுளைப் படைச்சான்
இது புரியாதவன் மனுஷன் படைச்ச கடவுளை நம்புறான்
புரிஞ்சவன் படைச்ச அந்தக் கடவுளையே நம்புறான்”
என்று சம்பந்தமே இல்லாமல் தனது ட்விட்டரில் புலம்பித் தீர்த்திருக்கிறார்.
ஒரு காலத்தில் நடிகர் சங்கத்தின் விவாகாரங்கள், போராட்டங்களில் பங்களிப்பு, இடையில் ரொமான்ஸ் மன்னன் என பண்முகம் காட்டி வந்த சிம்பு இப்போது சத்குரு ஜக்கியின் ஆன்மீக சீடன் போல ஆகிவிட்டது அவரது ரசிகர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரின் இது போன்ற ஆன்மீக புலம்பல்களுக்கு ”என்ன தல இப்படியெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க…” என்கிற ரீதியில் கலாய்த்தல் பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்.
ஏன் காதலில் விழுவானேன், அப்புறம் புலம்பித் தீர்ப்பானேன்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment