Wednesday, January 7, 2015

இது கில்மா படமா..? : நயனுக்கு வந்த ‘டைட்டில்’ சங்கடம்

No comments :
ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட ஹாரர் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யாவுடன் ‘மாஸ்’ மற்றும் ‘நெடுஞ்சாலை’ ஹீரோ ஆரியுடன் இணைந்து நடிக்கும் ‘நைட் ஷோ’.
இதில் மாஸ் பட டைட்டிலில் பிரச்சனை இல்லை, நைட் ஷோ டைட்டிலால் தான் நயன்தாராவுக்கு செம டென்ஷன். நெருங்கிய நண்பர்களே இது என்ன அந்த மாதிரியான படமா..?, கில்மா படமா..? என்கிற ரேஞ்சில் கேள்விகளை கேட்டுத் தொலைக்க, உடனே படத்தின் டைட்டிலை மாற்றச் சொல்லி விட்டாராம் நயன்.
இந்த படத்தின் பெயர் ‘நைட் ஷோ’ என்பது மக்களிடம் சற்று தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் என்பதால் நயனே இதை மாற்ற சோல்லி இருக்கிறாராம்.
புதுமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் இதில், ‘சுட்டகதை’, ‘கௌரவம்’ ஆகிய படங்களில் நடித்த லட்சுமி பிரியாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
‘மாயா’ படத்தின் கதை மூன்றுவிதமாக இருக்குமாம். ஆனால் நயன்தாரா ஒரே ஒரு கேரக்டரில்தான் நடிக்கிறார். இதுதான் மற்ற பேய் படங்களுக்கும், இந்த படத்துக்கும் வித்தியாசத்தை தருகிறது என்று சொல்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் பிரபு மற்றும் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.
நயனின் வேண்டுகோளைத் தொடர்ந்து தற்போது படத்தின் பெயரை ‘மாயா’ என்று மாற்றியிருக்கிறார்கள்.

No comments :

Post a Comment