Monday, January 5, 2015
கிளைமாக்ஸ் சொதப்பல், அனுஷ்கா ஓட்டம், அஜித் அப்செட் : அஜித் ரசிகர்கள் ஏமாற இத்தனை காரணங்களா..?
இந்த வருஷப் பொங்கலும் தல பொங்கல் தான் என்று உற்சாகம் கொப்பளிக்க ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக காத்திருந்தார்கள் அஜித் ரசிகர்கள்.
அஜித்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் புத்தாண்டு தினத்தின் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. ட்ரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து ட்ரெண்டிங்கில் முன்னணியில் வைத்திருந்தார்கள்.
ஆனால் புத்தாண்டு அதுவுமே இன்னொரு இடியை இறக்குவார்கள் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை.
‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு வராது, அதற்குப் பதில் ஜனவரி 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
கடந்த 1 மாதகாலமாக பொங்கல் ரிலீஸ் என்று பேப்பர்களில் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள் கொடுத்து விட்டு இப்போது திடீரென்று ரிலீசை தள்ளி வைத்ததற்கு அரைடஜன் காரணங்களை உண்டு.
படத்தின் கிளைமாக்ஸ் அஜித்துக்கு பிடிக்கவில்லை என்று கெளதம்மேனனுக்கு டோஸ் விட்டிருக்கிறார் அஜித். இதனால் கடுப்பானவர் ஒருவாரம் படப்பிடிப்புக்கே வரவில்லையாம்.
இதுஒருபுறம் என்றால் இன்னொரு புறம் அனுஷ்கா தெலுங்கு பாகுபாலிக்கு தேதிகளை கொடுத்து விட்டு என்னை அறிந்தால் படப்பிடிப்புக்கு ஒருவாரம் டிமிக்கி கொடுத்து விட்டார்.
ஆக இப்படியே 10 நாட்கள் படப்பிடிப்பு தாமதமானதால் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சமாதானம் பேசி ஒருவழியாக போனமாத மத்தியில் தான் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
இப்போது அந்த 10 நாட்களில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடியவில்லை. அது இன்னும் நாட்களை விழுங்கும் என்பதால் அதற்குப் பிறகு படத்தை சென்சார் அனுப்பி… சர்ட்டிபிகேட் வாங்கி… என நெருக்கடிகள் அதிகமானது.
இதனால் தான் திட்டமிட்டபடி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யமுடியவில்லையாம். ஆக இவர்கள் ஈகோ பிரச்சனையில் ஏமாந்து போனது அஜித் ரசிகர்கள் தான்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment