Monday, January 5, 2015
அஜீத் பட ரிலீஸ் தள்ளிப்போனது ஏன் இரு சகோதரர்களின் வேலையா இதுவரை வெளிவராத திடுக்கிடும் தகவல்
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என உறுதியாக அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் தற்போது கூறப்படுகிறது.
ஹாரீஸ் ஜெயராஜ் பின்னணி இசையமைக்கும் பணி தாமதமானது என்றும், எடிட்டிங் பணி முடியவில்லை என்றும் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கிய ‘ஐ’ திரைப்படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை மதுரை அன்புவின் சகோதரர் அழகரின் கையில் இருப்பதால் , ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் உரிமையை வைத்துள்ள மதுரை அன்பு அஜீத் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொன்னதாக கூறப்படுகிறது.
ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸானால் சகோதரர்களில் இருவரில் ஒருவருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சகோதரர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அஜீத்துக்கு என பெரிய மாஸ் இருப்பதால் அந்த படம் எப்பொழுதி திரையிட்டாலும் வசூல் செய்துவிடும் என்றும், ஆனால் ஷங்கர் படத்தை பொங்கல் போன்ற பண்டிகையில் ரிலீஸ் செய்தால்தான் வசூல் பார்க்க முடியும் என சகோதரர்கள் முடிவு செய்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment