Sunday, January 11, 2015
14 ம் தேதி ஆம்பள ரிலீசாகும், 15 ம் தேதி திருட்டு விசிடி வரும் : அப்போ பாருங்க விஷால் செய்யப்போற வேலையை!
சிசிஎல்லில் சென்னை ரைனோஸ் அணிக்கு கேப்டனாகக் கூட நேரமில்லாமல் இளம் ஹீரோக்களில் பிஸியாக இருக்கிறார் விஷால்.
‘விஷால் பிலிம் பேக்டரி’ என்று தனது பெயரில் சொந்தக் கம்பெனி ஆரம்பித்து எடுத்த மூன்று படங்களையும் சொன்ன தேதிகளில் ரிலீஸ் செய்து ஆச்சரியப்படுத்தினார்.
அவரது நான்காவது படமான ஆம்பள படமும் சொன்னதேதியான வருகிற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீசாகப் போகிறது.
இப்படி சொல்லியடிக்கும் கில்லி போல செயல்பட்டு வரும் விஷால் சொல்லாமல் இறங்கி அடிக்கும் வேலை திருட்டு விசிடி கும்பல்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவது தான்.
எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும் யாராவது புதுப்படங்களில் திருட்டு விசிடி விற்பதை கண்டுபிடித்தால் உடனே போலீசில் புகார் கொடுத்து புளியைக் கரைத்து விடுகிறார்.
தன் படங்களுக்கு மட்டுமில்லாமல் எந்த ஹீரோவின் படமாக இருந்தாலும் விஷால் இந்த வேலையை துணிச்சலாக செய்கிறார். அவருடைய இந்த துணிச்சலுக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தனது ஆம்பள படத்துக்கு திருட்டு விசிடியை ஒழிக்கவும் திட்டமிட்டு ஒரு காரியத்தை செய்யத் தொடங்கியிருக்கிறார்.
என்னவாம் அது?
வர்ற 14-ம் தேதி ‘ஆம்பள’ ரிலீஸ். அன்னைக்கு நைட்டே திருட்டு டி.வி.டி. வந்துடும். 15-ம் தேதி காலையில என்னோட கைக்கு வரும். நான் 16-ம் தேதி அந்த டி.வி.டியை எடுத்தாங்கன்னு கண்டுபிடிக்க சோதனைக்கு அனுப்பி வைப்பேன்.
முடிவு வர 48 மணி நேரமாகும். முடிவு வந்த அடுத்த நிமிடம், அந்தத் தியேட்டரை மூடுறதுக்கான எல்லா முயற்சிகளிலும் இறங்கிடுவேன். இதுதான் நடக்கப் போகிறது.
திருட்டி டி.வி.டி. என்றாலே வெளிநாட்டுக்கு அனுப்புற பிரிண்ட்ல இருந்து தான் வருதுன்னு நெனைக்கிறாங்க. நான் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். படம் வெற்றி என்று விருந்து வைக்கும் செலவில், உங்களோட படங்களுக்கு எந்தத் திரையரங்கில் இருந்து திருட்டு டி.வி.டி உருவானது என்பதை அறியச் செலவு செய்யுங்கள்.
இதை தெரிஞ்சிக்க 54 ஆயிரம் தான் செலவாகும். அதைப் பண்ணினால் திருட்டு டி.வி.டி.யை ஒழிக்க வாய்ப்பு உண்டு. முதலில் தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். என்னால் இதை ஒழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் இந்த ஆண்டில் செய்வேன் என்கிறார் விஷால்.
அப்படிப்போடு….!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment