Wednesday, January 7, 2015

அடப்போங்க த்ரிஷா.., உங்களுக்கெல்லாம் இதே வேலையாப்போச்சு…

No comments :
திருமணத்துக்குப் பிறகு நான் படங்களில் நடிக்க மாட்டேன், சினிமாவுக்கே முழுக்கு போட்டு விட்டு குடும்பத்தை கவனிக்கப் போய் விடுவேன் என்று நூத்துச் சொச்சம் நடிகைகள் சொல்லி விட்டார்கள்.
அப்படிச் சொன்ன எந்த நடிகைகளும் சொன்னபடி நடந்து கொண்டதில்லை. விதிவிலக்காக ஒன்றிறெண்டு பேர் இருக்கலாம்.
இப்படி முழுக்கு போடும் நடிகைகள் லிஸ்ட்டில் த்ரிஷாவும் சேரப்போகிறார் என்று சொன்னால் அதை நம்ப முடியுமா என்ன?Trisha Latest Photos-7
‘ஜோடி’ படத்தில் பிரசாந்த்துக்கு ஜோடியாக ஜோதிகா நடித்தபோது அவருக்கு தோழியாக வருவார் த்ரிஷா. அதன்பிறகு லேசா லேசா படத்தில் ப்ரியதர்ஷன் அவரை சோலோ ஹீரோயினாக்கினார். அதிலிருந்து பிக்கப் ஆக ஆரம்பித்தவர் 30 வயதைத் தாண்டியும் இப்போது வரை ஹீரோயினாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார்.
கமல், விஜய், அஜித், விக்ரம் என தமிழின் முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலானோரிடம் ஜோடி சேர்ந்து விட்டவருக்கு இன்றுவரை ஒரே ஒரு மனக்குறை தான்.
ரஜினிகாந்த் கூட ஒரு படத்திலும் ஜோடியாகவில்லையே என்கிற மன வருத்தம். அதற்காக தனது திருமணத்தைக் கூட தள்ளி வைத்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தான் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவை காதல் திருமணம் செய்யப் போகிறார் என்றார்கள். இருவரும் பல பார்ட்டிகளில் நெருக்கமாக தள்ளாடிக் கொண்டிருந்தார்கள்.
பிறகு ஒருநாளில் ராணாவுடனான காதல் முடிவுக்கு வந்ததும், சென்னையைச் சேர்ந்த கட்டுமான அதிபர் வருண் மணியனை த்ரிஷாவுக்கு நிச்சயம் செய்தார் அம்மா உமா.
அஜித்துடன் என்னை அறிந்தால் உட்பட இன்னும் சில படங்களில் நடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்த போதுதான் வருண் மணியனுடன் நிச்சயம் செய்யப்பட்ட போட்டோ ஆதாரங்கள் இணையதளங்களில் லீக்கானது. அதை இன்றுவரை த்ரிஷாவும், அவரது தாய்க்குலமும் சமாளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட இருப்பதாக கூறியிருக்கிறார் த்ரிஷா. சினிமாவை விட்டு முழுமையாக விலகிச் செல்லாமல் சினிமா தொடர்பான மற்ற வேலைகளில் ஈடுபடுவாராம்.
நீங்க சொல்றதை நம்பலாமா த்ரிஷா மேடம்?

No comments :

Post a Comment