Tuesday, January 6, 2015
ரசிகர்களை சந்தித்தார் ரஜினி! : இதுக்கு பேர் தான் இன்ப அதிர்ச்சியோ..?
இந்த நிகழ்வு எதேச்சையாக நடந்தது தான். ஆனாலும் தன்னைத் தேடி வந்த ரசிகர்களை ஏமாற்றாமல் அவர்களை சந்தித்து புத்தாண்டிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
வழக்கமாக தனது பிறந்த நாள் என்றாலே முன்னணி ஹீரோக்கள் சென்னையில் இருந்து கொண்டே ”நான் வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறேன். அதனால் யாரும் என் வீட்டுக்கு வந்து ஏமாற வேண்டாம் என்று கூசாமல் பொய் சொல்வார்கள்”. ஒவ்வொரு பிறந்த நாளிலும் சில ஹீரோக்கள் இதையே திரும்ப திரும்ப சொல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ரஜினியோ அப்படியில்லை. எந்த இடத்தில், எந்த நேரத்தில் ரசிகர்கள் தன்னை சந்திக்க ஆசைப்பட்டாலும், முகம் சுளிக்காமல் புன்னகையோடு நின்று அவர்களுடன் போட்டோ எடுத்து சந்தோஷப்படுத்துகிறார்.
‘லிங்கா’ படத்தின் விழா ஹைதாராபாத்தில் நடந்த போது கூட அந்த விழாவில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்புவதற்காக இரவு 10 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கேயிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்த போது அவர்களோடு நின்று புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தினார்.
அப்படித்தான் புத்தாண்டு தினமான நேற்றும் ஒரு இன்ப அதிர்ச்சி ரசிகர்களுக்கு நடந்திருக்கிறது. அதுவும் அவரது வீட்டிலேயே…
புத்தாண்டை முன்னிட்டு ரஜினிகாந்த்தை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் நேற்று காலை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டருகே குவிந்தனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி எதுவுமே திட்டமிடப்படில்லை. என்றாலும் ரசிகர்கள் தன்னை சந்திக்க வந்திருப்பதை அறிந்த ரஜினிகாந்த், உடனே வீட்டுக்கு வெளியில் வந்து அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதோடு அவர்களுடன் இன்று போட்டோவுக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment