Monday, January 12, 2015

பப்ளிசிட்டிக்கு கூட வர மாட்டாரா? : வலியவன் இயக்குநருக்கு கடுப்பை கிளப்பிய ஜெய்!

No comments :
எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக வலியவன் படத்தை முடித்து விட்டு வந்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.
ஜெய் தான் ஹீரோ, ஆண்ட்ரியா ஹீரோயின் ”வலியவன் என்றால் எதை வேண்டுமானாலும் சமாளிப்பவன்” என்றுதான் அர்த்தம். அப்படித்தான் படம் முழுக்க ஜெய் கேரக்டர் ட்ராவல் ஆகும் என்றார் இயக்குனர் சரவணன்.
ஹீரோயின் ஆண்ட்ரியா இதுக்கு மேல குறைக்க முடியாது என்று சொல்வதைப் போல ஒரு குட்டைப்பாவாடையைப் போட்டுக்கொண்டு வந்திருந்தார்.
இது போதாதா போட்டோகிராபர்களுக்கு? போட்டோக்களை எடுத்துத் தள்ளினார்கள்.
முதல் தடவையா நான் இந்தப்படத்துல சிங்கிள் ஹீரோயினா நடிச்சிருக்கேன். கண்டிப்பாக இந்தப்படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று அவர் போட்டு வந்திருந்த குட்டைப் பாவாடையைப் போலவே அளவாகப் பேசிவிட்டு உட்கார்ந்தார்.
பொதுவாக இதுபோன்ற விழாக்களுக்கு ஹீரோயின்கள் தான் டிமிக்கி கொடுப்பார்கள். ஆனால் வலியவன் பட பிரஸ்மீட்டுக்கு வராமல் டிமிக்கி கொடுத்திருந்தார் ஹீரோ ஜெய்.
விடுவார்களா நிருபர்கள்? ஒரு படத்தோட பப்ளிசிட்டிக்கு ஹீரோ வரணும்னு தெரியாதா? எங்க ஜெய்யைக் காணோம் என்று அடுத்தடுத்து கேள்விகள் பறந்தது. “எதற்கு வராதவங்களை பத்தியே கேக்குறீங்க. வந்திருக்குறவங்களை கேளுங்களேன்..?” என்று கடுப்பாகவே பேசினார் டைரக்டர். ஜெய் மீது செம ஆத்திரத்தில் அவர் இருக்கிறார் என்பதை மட்டும் அவரது பதிலில் தெரிந்து கொள்ள முடிந்தது.
விடவில்லை நிருபர்கள். அவரு லேட்டஸ்ட்டா சரக்கடிச்சிட்டு கார் ஓட்டி போலீஸ்ல மாட்டிக்கிட்டாப்ல, இங்க வந்தா அதைப்பத்தி நாங்க கேள்வி கேட்போம்னு பயந்து போய் வராம இருப்பாப்ல. அதுக்குப் பயந்து போய் படத்தோட பப்ளிசிட்டிக்கு வராம இருக்கிறது நல்லா இல்லை என்றார்கள்.
அவர் எனக்கு ரெஸ்பான்ஸ் கொடுக்கலேங்கிறது தான் பிரச்சனை என்றார் இயக்குனர்.
என்னம்மா ஜெய் இப்படிப் பயப்படுறீங்களேம்மா…?

No comments :

Post a Comment