Thursday, January 8, 2015
ஜனவரி 23ல் நிச்சயதார்த்தம். த்ரிஷா அதிகாரபூர்வ அறிவிப்பு.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள த்ரிஷாவுக்கு வரும் ஜனவரி 23ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவின் நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபரும், படத்தயாரிப்பாளருமான வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஜனவரி 23ஆம் தேதி எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தங்கள் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடரவுள்ளதாகவும் சமீபத்தில் கூட இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அதுகுறித்து பின்னர் அறிவிக்க உள்ளதாகவும் த்ரிஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
த்ரிஷாவின் திருமண நிச்சயதார்த்த தகவல் வெளியானவுடன் டுவிட்டரில் இந்திய அளவில் த்ரிஷாவின் ஹேஷ்டேக் முதலிடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment