Thursday, January 8, 2015

ஷங்கரின் ‘ஐ’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை பிரச்சனை. நடந்தது என்ன?

No comments :
ஷங்கர் இயக்கிய பிரமாண்ட திரைப்படமான ‘ஐ’ வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ‘ஐ’ படத்தின் வெளிநாட்டு உரிமைகளை ஹைப்பர் பீஸ் (Hyperbees) என்ற மும்பை நிறுவனம் ரூ.10 கோடி கொடுத்து உரிமை பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டு முன்பணமாக ரூ.5கோடியை கொடுத்தது. மீதி ஐந்து கோடி பணத்தை ஒப்புக்கொண்ட நாட்களுக்குள் கொடுக்காததால், Hyperbees நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஆஸ்கார் நிறுவனம் கேன்சல் செய்தது.
ஆனால் . Hyperbees நிறுவனம் இதுகுறித்து வழக்கு தொடுக்க உள்ளது. லண்டனில் இருந்து வங்கி மூலம் பணப்பட்டுவாடா செய்ய வங்கி ஊழியர்கள் தாமதம் செய்துவிட்டதால்தான் குறிப்பிட்ட நேரத்திற்கு பணம் சென்றடையவில்லை என்றும், இதில் தங்கள் நிறுவனத்தின் தவறு எதுவும் இல்லாத பட்சத்தில் தங்கள் ஒப்பந்ததை கேன்சல் செய்தது முற்றிலும் சட்டத்திற்கு விரோதமானது என்றும் கூறி வழக்கு தொடுக்க உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளது.
தற்போது ‘ஐ’ படத்தின் அமெரிக்க உரிமை தவிர மற்ற நாட்டின் உரிமையை ஐங்கரன் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உரிமையை ATMUS Entertainment என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்த திடீர் சிக்கலால் ‘ஐ’ பொங்கல் திருநாளில் வெளியாகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மேலும் ‘ஐ’ படத்தை ரிவைசிங் கமிட்டி இன்னும் பார்த்து சர்டிபிகேட் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment