Thursday, January 8, 2015

நடக்கிற கூத்தைப் பார்த்தா பொங்கலுக்கு ஆம்பள மட்டும் தான் வருவார் போல..!!!

No comments :
வருகிற ஜனவரி 14-ஆம் தேதி அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, விஷாலின் ‘ஆம்பள’, விக்ரமின் ‘ஐ’, கார்த்தியின் ‘கொம்பன்’, சிவகார்த்திகேயனின் ‘காக்கிச்சட்டை’ ஆகிய 5 படங்கள் முட்டி மோதப்போகின்றன. இப்படித்தான் கடந்த ஒரு மாத காலமாக மீடியாக்களில் பொங்கல் ரிலீஸ் படங்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இதில் ‘ஐ’ படம் ஷங்கரின் வழக்கமான பிரம்மாண்டப்படம் என்பதோடு மட்டுமில்லாமல் சுமார் 100 கோடி வரை பணத்தை விழுங்கியிருப்பதால் போட்ட முதலீட்டை கொஞ்சமாவது எடுக்க குறைந்தது 600 தியேட்டர்களாவது அந்தப்படத்துக்கு தேவைப்படும்.
அதேபோல விஷாலும் தனது சொந்தக் கம்பெனியை ஆரம்பித்தலிருந்து தயாரிக்கும் எல்லாப் படங்களையும் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டே படப்பிடிப்பையும் ஆரம்பிக்கிறார். சொன்ன தேதியிலேயே படத்தையும் ரிலீஸ் செய்து வருகிறார். அந்த லிஸ்ட்டில் அவரது ‘ஆம்பள’ படத்தையும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்த 2 படங்களுக்கும் இடையே தியேட்டர்களை வளைக்கும் வேலைகள் தடபுடலாக நடந்தாலும், இடையில் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தது ‘ஐ’ படத்தயாரிப்பாளர் தான்.
அஜித் படம் பொங்கலுக்கு வந்தால் விக்ரம் படத்துக்கு அவ்வளவு தியேட்டர்கள் யார் கொடுப்பார்கள் என்று யோசித்தவர் உடனடியாக ஐ ரிலீசை ஒரு வாரத்துக்கு முன்பாகவே அதாவது ஜனவரி 9-ஆம் தேதியே பிக்ஸ் பண்ணினார். இதற்கிடையே கார்த்தியின் கொம்பனும் பொங்கல் ரிலீஸ் என்று பேப்பரில் விளம்பரம் கொடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டையும் பொங்கலுக்கு வரும் என்று சொல்லப்பட்டது.
ஆக இந்தப் பொங்கலுக்கு 5 படங்கள் கன்பார்ம் ரிலீஸ் என்று உறுதியான நிலையில் தான் நேற்று கொம்பன், காக்கிச்சட்டை ஆகிய படங்களோடு அஜித்தின் என்னை அறிந்தால் படமும் பொங்கல் ரேஸிலிருந்து விலகிக் கொண்டது என்கிற தகவல் வெளியானது. இத்தகவலை அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எ.ரத்னமே அறிவித்தார். பொங்கலுக்குப் பதிலாக என்னை அறிந்தால் படம் ஜனவரி 29-ஆம் தேதி ரிலீசாகும் என்றார்.
ஆக மூன்று படங்கள் பொங்கல் ரேஸிலிருந்து விலகியதையடுத்து இப்போது விஷாலின் ‘ஆம்பள’ படத்துக்கும், விக்ரமின் ஐ படத்துக்கும் தான் பொங்கலில் நேரடிப்போட்டி.
இந்த நிலையில் ஐ படத்தின் ரிலீசை திட்டமிட்ட தேதியான 9-ஆம் தேதிக்குப் பதிலாக 14-ஆம் தேதி பொங்கல் அன்றே ரிலீஸ் செய்து விடலாமா என்று யோசித்து வருகிறாராம் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன். ’என்னை அறிந்தால்’ ரிலீஸ் திடீரென்று தள்ளிபோடப்பட்டதால் அவர் இப்படி ஒரு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இப்படி பொங்கல் ரிலீஸ் படங்களில் ரிலீஸ் தேதி மாறி மாறி மாறி மாறிக்கொண்டே இருப்பதால் எங்கே, நடக்கிற கூத்தை எல்லாம் பார்த்தால் பொங்கலுக்கு ‘ஆம்பள’ மட்டும் தான் வரும் போல…!!! என்று சிரிப்பாய் சிரிக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

No comments :

Post a Comment