Monday, February 2, 2015
தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவதா? பவர் ஸ்டாருக்கு டி.சிவா எச்சரிக்கை…
சென்னை: ‘மதுரை சம்பவம்’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கிய யுரேகா, அடுத்து ‘தொப்பி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். முரளிராம், ரக்ஷா நடித்துள்ளனர். எஸ்.பரமராஜ் தயாரித்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு.
ராம்பிரசாத் சுந்தர் இசை. இதன் பாடல்களை கே.பாக்யராஜ் வெளியிட்டார். தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் பி.எல்.தேனப்பன், செயலாளர் டி.சிவா, எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன், நடிகர்கள் விஜய் சேதுபதி, விமல் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, ‘என்னை நடிக்க அழைத்துச் செல்பவர்கள், ‘ரோப்’ கட்டி தொங்க விடுகிறார்கள். ஆனால், நடித்ததற்கு அவர்கள் தரும் செக், பணம் இல்லாமல் திரும்பி விடுகிறது. நானே செக்
விஷயத்தில் பேமஸ். என்னிடமே இப்படி நடக்கிறார்கள். அதனால், இனி படம் தயாரிக்க வருபவர்களிடம் குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கி, தயாரிப்பாளர் சங்கம் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பளப் பிரச்னை வரும் போது எடுத்து தர வேண்டும். பணம் இல்லாமல் யாரும் படம் எடுக்கக் கூடாது’ என்றார். பிறகு பேசிய டி.சிவா, ‘தயாரிப்பாளர்கள் யார் யாரிடமோ கடன் வாங்கி படம் தயாரிக்கிறார்கள். சாதாரண வைத்தியர் சீனிவாசன், இன்றைக்கு பவர் ஸ்டாராகி இருப்பது தயாரிப்பாளர்களால். நடிகர்கள் நடித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். பிறகு படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் போராடுகிறார்கள். படம் ஜெயித்தால்தான் போட்ட காசு கைக்கு வந்து சேரும். சீனிவாசன் இப்படி தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று எச்சரிக்கை
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment