Thursday, February 5, 2015
பாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்…
தமிழ், தெலுங்கு படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்தார் தமன்னா. ஹிம்மத்வாலா, ஹம்ஷகல், என்டர்டெயின்மென்ட் என 3 படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் ஹிட்டாக அமையவில்லை. இதையடுத்த தனது கவனத்தை மீண்டும் தமிழ், தெலுங்கு படங்கள் பக்கம் திருப்பினார்.‘மீண்டும் இந்தி படங்களில் நடிப்பீர்களா?‘ என்று அவரிடம் கேட்டபோது,‘தமிழ் தெலுங்கில் 3 பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறேன். இப்போதைக்கு இந்த படங்களை முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். இந்தியை பொறுத்தவரை அதிக படங்களில் நடிக்க அழைப்பு வராவிட்டாலும் எனது திறமைக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. தென்னிந்திய படங்களை முடித்தபிறகு இந்தியில் நடிக்க வரும் பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்வேன்‘ என்றார். ஏற்கனவே இந்திக்கு சென்ற அசின், திரிஷா, காஜல் அகர்வால் ஆகியோரும் பட வாய்ப்பு கிடைக்காமல் சோர்வடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment