Monday, February 2, 2015

தனுஷை இயக்குகிறார் பிரபு சாலமன்…

No comments :
பிரபு சாலமன் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். தனுஷ் இந்தியில் நடித்துள்ள ‘ஷமிதாப்’ படம் 6ம் தேதியும், தமிழில் நடித்துள்ள ‘அனேகன்’ படம் 13ம் தேதியும் வெளியாகிறது. தவிர, ‘மாரி’ என்ற
படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் முடிந்த பிறகு பிரபு சாலமன் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 30வது படமான இதை, அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். இதுகுறித்து பிரபு சாலமன் கூறும்போது, ‘சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை நான் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கான லொகேஷன் தேர்வு நடந்து வருகிறது. தனுஷ் படத்தின் டெக்னீஷியன்கள் மற்றும் ஷூட்டிங் எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்’ என்றார்.

No comments :

Post a Comment