Monday, February 2, 2015
வாய்ப்பு தேடி யார் பின்னாலும் ஓட மாட்டேன்: நித்யா மேனன் கறார்…
கைவசம் அதிக படங்கள் இல்லாவிட்டாலும் கெத்தை விட்டுக்கொடுக்காமல் பேசும் நடிகைகளில் நித்யா மேனனும் ஒருவர். 26 வயதில் இதுவரை தமிழ், மலையாளம்,
தெலுங்கு என 3 மொழிகளில் 32 படங்கள் வரை நடித்து விட்டார். கிளாமராக நடிக்கும் கதாபாத்திரங்களை ஏற்காவிட்டாலும் கதாபாத்திரத்துக்கு கிளாமர் அவசியம் தேவை என்றால் ஓகே சொல்கிறாராம். நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டாலும் பலவற்றை ஏற்க மறுத்து விடுகிறார். இதுபோல் படங்களை தவிர்ப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு பதில் அளித்தார்.‘இதுவரை நான் நடித்துள்ள கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றுக்கான வேலை செய்ததில் திருப்தியாகவே இருக்கிறேன். எனது ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனே அடுத்த படம் வந்தாக வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. வாய்ப்பை பெறுவதற்காக முந்திக்கொண்டு ஓடுவதும் கிடையாது. வாய்ப்பு தேடி யார் பின்னாலும் ஓடவும் மாட்டேன்’ என்றார் நித்யா மேனன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment