Thursday, January 8, 2015
விக்ரம் ஒரு பைத்தியம்! : ஷங்கர் ஏன் இப்படிச் சொன்னார்?
ஷங்கரின் ஐ படம் பொங்கலுக்கு ரிலீசாகுமா இல்லையா என்பது அப்படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
ஆனால் படத்தின் ஹீரோ விக்ரமின் உழைப்பைப் பற்றித்தான் இந்த உலகமே பேசுகிறது. பெரும்பாலும் ஷங்கர் படங்களில் அவரது உழைப்பைத்தான் எல்லோரும் பேசுவார்கள். முதல் தடவையாக இதில் விக்ரமின் உழைப்பைப் பற்றி புகழ்கிறார்கள்.
அது ஏன் என்பதற்கு ஷங்கரே பேசினார். சமீபத்தில் நடந்த இப்படத்தின் விழாவில் ஷங்கர் பேசிய போது விக்ரமை ஒரு பைத்தியம் என்றார்.
கூட்டம் ஷாக்காக தொடர்ந்து ஷங்கர்….
“என் படத்தின் முக்கிய காட்சிகளை எப்போதுமே டிரெய்லரில் வைக்கமாட்டேன். ஆனால் ஐ திரைப்படத்தின் பல முக்கிய காட்சிகளை நான் டிரெய்லரில் காண்பித்திருக்கிறேன். அது ஐ படத்தை ரசிகர்கள் மனதில் கணிக்க முடியாத உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
ஐ திரைப்படத்தின் கதையை 10 வருடங்களாக எழுதி வந்தேன். ஐ படத்தைப் பற்றி 15 வருடங்களுக்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசியிருக்கிறேன். விக்ரம் ஒரு பைத்தியம். கதாபாத்திரத்திற்கா எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய பைத்தியக்காரத்தனம் விக்ரமிடம் இருக்கிறது” என்றார்.
சீயானோட உழைப்பு தான் சேது படத்திலேயே தெரியுமே..?
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment