Thursday, January 8, 2015
இவங்க எப்படி பிரிஞ்சாங்க..? : தலையை பிய்த்துக் கொள்ளும் கோடம்பாக்கம்
சில காதல்கள் பிரிவதை பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள் கோடம்பாக்கத்தினர். சிம்பு – ஹன்ஷிகா ஜோடி பிரிந்த போது இப்படித்தான் பலருடைய கொண்டாட்டங்கள் இருந்தன.
ஆனால் சித்தார்த் – சமந்தா ஜோடி திடீரென பிரிந்த போது எல்லோருக்கும் ஆச்சரியம்.
சித்தார்த்தும், சமந்தாவும் கடந்த 2012-ல் ஜாபர் தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்த போது ஒருவருக்கொருவர் மனதை பறி கொடுத்தனர்.
டீப்பான அந்தக் காதல் இருவரும் பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்கும் அளவுக்கு போனது. சினிமா நிகழ்ச்சிகளிலும் கை கோர்த்தபடி வந்து கலந்து கொண்டனர். நெருக்கமாக அமர்ந்து போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்கள்.
அத்தோடு நிற்கவில்லை. கோவில்களுக்கும் ஜோடியாக சென்றார்கள். அருகருகே உட்கார்ந்து யாகம், பூஜைகளும் செய்தனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் இருவரும் காதலை திடீரென முறித்து கொண்டு பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது.அதுவரை கவர்ச்சியில் லிமிட் வைத்து நடித்த சமந்தா அதன்பிறகு எல்லையே இல்லாமல் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதில் ஒரு துளி தான் அஞ்சானில் அவர் போட்ட அரைக்கால் டவுசர் ஆட்டம்.
அதன்பிறகு இருவரையும் எந்த ஒரு மேடையிலும் ஒன்றாகப் பார்க்க முடிவதில்லை. சமீபத்தில் கூட புத்தாண்டை தனது தோழியுடன் தான் தனியாக கொண்டாடியிருக்கிறார் சமந்தா. அந்த கொண்டாட்டத்தில் சித்தார்த் இல்லை. காதல் முறிவுக்கான காரணம் தெரியவில்லை. இருவரும் அவரவர் வேலையில் தீவிரமாகியுள்ளனர். இதனால் தான் ஒருவரை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் தாங்கள் உண்டு தங்கள் படங்கள் உண்டு என்று தனித்தனியாக நடித்து வருகிறார்கள்.
ஒரு நல்ல ஜோடிப்பொருத்தம் ஏன் பிரிந்தார்கள் என்பதை இன்றுவரை சொல்லாமலேயே இருக்கிறார்கள். அது ஏன் என்பது தான் புரியாமல் தலையை பிய்த்துக் கொள்ளுகிறது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்!
மேட்டர் எதுவா இருந்தாலும் சமர்த்தா சொல்லிடுங்களேன் சமந்தா!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment