Sunday, January 11, 2015

பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த பைனான்சியர் கைது.

No comments :

பாலிவுட்டின் பல முன்னணி படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் முபத்லால் காடியால் (Mufaddal Ghadial) என்பவர் பிரபல நடிகையை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்த மும்பை போலீஸார் அவர் மீது 420 மற்றும் 370 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பைனான்சியர் முபத்லால் கடந்த டிசம்பர் மாதம் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் நடிக்க நடிகை ஒருவரை ரூ.3 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் நடிகையை தனது வீட்டிற்கு வரவழைத்து முபத்லால் பார்ட்டி கொடுத்ததாகவும், பார்ட்டியில் நடிகைக்கு கொடுக்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அதன்பின்னர் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகையிடம் திருமணம் செய்து கொள்வதாய் முபத்லால் ஆசை வார்த்தை காட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொல்லாமல் இருக்க மிரட்டப்பட்டதாகவும் நடிகை மும்பை போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ள போலீஸார், முபத்லால் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

No comments :

Post a Comment