Sunday, January 11, 2015

லிங்கா’ படத்தை ஓடவிடாமல் செய்தது யார்? அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேட்டி

No comments :
ரஜினி நடித்த லிங்கா திரைப்படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் அதற்கு படத்தயாரிப்பாளர் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் நடந்தது. இந்த உண்ணாவிரத்ததில் அரசியல் பிரமுகர்களான சீமான் மற்றும் வேல்முருகன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தை வெளியிட்ட அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோர் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: நான் 30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். நான் சிறு வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன். 12 வருடங்களுக்கு முன் ரஜினி எனக்கு நண்பரானார். ரஜினிதான் என்னை அணுகி படத்தை தயாரிக்க சொன்னார். கடவுள்தான் இந்த பாக்கியத்தை கொடுத்தாக கருதினேன். படம் பூஜை போடும்போதே ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம்தேதி வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து கஷ்டப்பட்டு உழைத்தோம். பணத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக நானே கடன் வாங்காமல் என் முழு பணத்தையும் முதலீடு செய்தேன்.
நான் தயாரித்த படத்தை ஈராஸ் நிறுவனத்திடம் விற்றோம். அவர்கள் அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிட்டனர். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், படம் வெளியான உடனேயே படம் சரியில்லை, எந்த ஷோவும் ஃபுல்லாகவில்லை என்று இவர்களே கூறிவிட்டார்கள். இதனால் மக்கள் வரத்து குறைந்துவிட்டது. படத்தை புரமோசன் செய்யுங்கள் என்று என்னிடம் கூறியிருந்தால் நான் ரஜினியிடம் பேசி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்போம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

No comments :

Post a Comment