Tuesday, January 20, 2015
த்ரிஷாவால் உஷாரான அனுஷ்கா
த்ரிஷாவுக்கு இப்போ கல்யாணம், அப்போ கல்யாணம் என்று கூறி வந்த நிலையில், த்ரிஷாவே தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி வதந்திகளுக்கு முற்றப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், அவரைப்போலவே 32 வயதான அனுஷ்காவும் திருமண செய்தியை வெளியிடுவார் என பலர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ருத்ரமா தேவி, பாகுபலி போன்ற சரித்திர படங்களின் ஓயாது நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா தற்போது குடும்பத்தாருடன் வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ளார்.
மேலும் இப்படங்களுக்கு பிறகு அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அனுஷ்கா டூர் சென்று முடிந்து வந்ததும், ப்ரஷ்ஷாக அமர்ந்து புதிய படங்களுக்கான கதையை கேட்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment