Monday, January 5, 2015

பறிபோனது அசினின் வீடு….. அழுது தீா்த்தாா் அசின்

No comments :


பிரபல நடிகை அசினுக்கு கொச்சி ரவிபுரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை கொச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்தது.
ஆனால் இதற்கான பணம் ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்திற்கு கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி எர்ணாகுளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, அசினுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. மேலும், வருகிற 14–ந் தேதிக்குள் ரூ.10 லட்சத்தை கோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அசின் தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் மூலம் அறிமுகமானார். கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா என முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இந்தியிலும் ஐந்து படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரிலீசான அசின் படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் இந்தியில் மார்க்கெட் சரிந்துள்ளது.
ஒரே ஒரு படம் மட்டும் கைவசம் உள்ளது. மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இதற்காக மானேஜர் மூலம் வாய்ப்பு தேடி வருகிறார்.

No comments :

Post a Comment