Monday, January 5, 2015

வருகிறார் நிர்வாணப் புகழ் பூனம் பாண்டே : இனிமே தமிழ்நாடும் செமையா சூடாகும்!

No comments :

2011-ல் நடைபெற்ற உலகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நான் நிர்வாணமாக போஸ் கொடுப்பதாக அறிக்கை விட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் பிரபல பாலிவுட் கவர்ச்சிக்கன்னி பூனம் பாண்டே.
தொடர்ந்து தனது ட்விட்டரில் அவ்வப்போது அரை நிர்வாணப் போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு ரசிகர்களை சூடேற்றி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அவர் பாலிவுட்டில் நாசா என்ற படத்திலும் நடித்தவர் தற்போது தெலுங்கில் மாலினி அன் கோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் மாலினி அன் கோவின் தமிழ்வெர்ஷனான மைதிலி அன் கோ என்ற படத்தின் மூலம் தாம் தமிழ்சினிமாவுக்கும் எண்ட்ரி போடுகிறார் பூனம் பாண்டே.
கிங்ஸ் எண்டர்பிரைசஸ், டி.ஜி போஸ்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக பூனம்பாண்டே நடிக்கிறார். அவருடன் பாண்டியராஜன், சுமன், ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு வில்லனாக நடித்த ஜாகீர்உசேன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் வீரு.கே கூறியதாவது…
இந்தப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். சினிமா துறையில் ஒரு பெண் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த படம் ஒரு எடுத்துகாட்டாக இருக்கும். ஆங்கிலப் படத்திற்கு இணையாக இந்தப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது.
நாயகியை மையப்படுத்தி முழுக்க முழுக்க கதை உருவாகப்பட்டுள்ளது.
நாயகி இருக்கும் ஊரில் தீவிர வாத கும்பல் ஒன்று வெடிகுண்டு வைக்க சதி திட்டம் தீட்டுகிறார்கள் இது அறிந்த நாயகி அவர்களுடன் மோதி இறுதியில் அந்த திட்டத்தை முரியடித்தாரா என்பது படத்தின் கிளைமாக்ஸ். அதிரடியாக ஐந்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முழுவது அமெரிக்கா, ஜெர்மன், மும்பை, ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. மிக விரைவில் இந்த படம் உலக முழுவது வெளியாக உள்ளது என்றார்.
இனிமே தமிழ்நாட்டிலும் சூட்டைக் கிளப்புவார் பூனம் பாண்டே…

No comments :

Post a Comment