Tuesday, January 6, 2015
50 லட்சம் குடுங்க போதும்! : டார்ச்சர் பண்றது ஸ்ரீதிவ்யா இல்ல, அவங்க அம்மா!
ஒரு படம் ஹிட்டானாலே நடிகைகளை கையில் பிடிக்க முடியாது. அவர்களும் ஆகாயத்தில் தான் பரப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் ஸ்ரீதிவ்யாவுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்கார துரை என தொடர்ச்சியாக மூன்று படங்கள் ஹிட்டானால் அலப்பறைகளுக்கு கேட்க வேண்டுமா என்ன?
கைவசம் பென்சில், ஈட்டி, காக்கிச்சட்டை என அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களை வைத்திருக்கும் அவர் இந்த மூன்று படங்களும் கண்டிப்பாக ஹிட்டாகி விடும் என்று படங்களின் தயாரிப்பாளர்களை விட அதிகம் நம்புகிறாராம்.
கூடவே ஸ்ரீதிவ்யாவின் சக போட்டியாளரான லட்சுமிமேனனும் படிப்பதற்காக நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்டு விட்டு போய் விட்டது வசதியாகி விட்டது.
ஹீரோயின் பஞ்சத்தில் தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் பெரும்பாலானோர் ஸ்ரீதிவ்யாவையே ஹீரோயினாக கமிட் செய்ய படையெடுக்கிறார்கள்.
டைரக்டர்கள் கதையைச் சொல்லி விட்டு வந்ததும் பின்னாடியே சம்பளம் பேசப் போகும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வருகிறார்களாம்.
40 லட்சம் வாங்கிக்கிட்டிருந்தா எம்பொண்ணு, உங்களுக்குத்தான் தெரியுமே நடிச்ச மூணு படமும் நல்ல கலெக்ஷனோட ஹிட்டாகியிருக்கு. அதனால கூட 10 லட்சம் ரூபாய் சேர்த்து குடுங்க, உடனே கால்ஷீட் ரெடி என்கிறாராம் ஸ்ரீதிவ்யாவின் தாய்க்குலம்.
இதனால் வெறு ஹீரோயினும் கிடைக்காமல் சம்பளத்தையும் அதிகமாக கொடுக்க முடியாமல் மனம் நொந்து திரும்புகிறது தயாரிப்பாளர் வட்டம்.
மேனேஜர் வைத்தால் கமிஷனாக சில லட்சங்களை கொடுக்க வேண்டுமென்பதால் தனது அம்மாவையே மேனேஜர் வேலையை கவனிக்கச் சொல்லி விட்டாராம் இந்த உஷாரான ஊதாக்கலரு ரிப்பன்.!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment