Monday, January 5, 2015
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் சந்திரமுகி 2? பி.வாசு இயக்குவாரா?
கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான், லிங்கா ஆகிய இரண்டு படங்களுமே குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாததால், அடுத்த படத்தை உடனடியாக அவர் ஆரம்பிக்க முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இம்முறை ரஜினியை இயக்கவுள்ளவர் பி.வாசு என செய்திகள் கூறுகின்றன.
சமீபத்தில் ரஜினியை சந்தித்த பி.வாசு ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை ரஜினிக்கு பொருத்தமாக இருந்ததால் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி நடிப்பில் உழைப்பாளி, மன்னன், பணக்காரன், சந்திரமுகிய ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய பி.வாசு குசேலன் என்ற தோல்விப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷங்கர் எந்திரன் 2 என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. ரஜினி அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்பதை பொங்கலுக்கு பின்னர் அறிவிக்கவுள்ளதாக அவரது வட்டாரங்கள் கூறுகின்றன
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment