Thursday, January 8, 2015

விஜய் படத்திற்கு போட்டியாக வெளிவரும் ஜோதிகா படம்

No comments :
மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா ரீ எண்ட்ரி ஆகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி உள்பட பல இடங்களில் நடந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழிலும் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் 2ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடித்துள்ளார். இவர் புதுப்புது அர்த்தங்கள், சங்கமம் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறையில் விஜய் நடித்த புலி உள்பட பல முக்கிய திரைபடங்களும் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment