Wednesday, January 21, 2015
த்ரிஷா இல்லனா நயன்தாரா : ஜி.வி. பிரகாஷுக்கு அடிச்ச லக்!
‘டார்லிங்’கில் நடித்தாரோ, நடந்தாரோ ஆனால் பட வாய்ப்புகள் மட்டும் ஜி.வியைத் தேடி வருவது நிற்கவில்லை.
அந்த வகையில் டமால் டுமீல் படத்தைத் தொடர்ந்து கேமியோ பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் சி.ஜே. ஜெயகுமார் தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான ‘த்ரிஷா இல்லன்ன நயன்தாரா’ படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர்.
வருகிற 22-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் ‘கயல்’ படத்தின் நாயகி ஆனந்தி.
பல இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஆதிக் ரவிசந்திரன் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல்வேறு வெற்றி படங்களுக்கு ஒளிபதிவாளராக பணியாற்றிய ரிச்சர்ட் எம் நாதன் இந்த படத்தில் ஒளிபதிவாளர் ஆக பணியாற்றுகிறார்.
பல இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஆதிக் ரவிசந்திரன் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல்வேறு வெற்றி படங்களுக்கு ஒளிபதிவாளராக பணியாற்றிய ரிச்சர்ட் எம் நாதன் இந்த படத்தில் ஒளிபதிவாளர் ஆக பணியாற்றுகிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் மிக அருமையான பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து இருக்கிறார். சமீபத்திய வரவுகளில் மிகவும் நேர்த்தியான பட தொகுப்பாளர் என போற்றப்படும் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.
பல்வேறு விளம்பர படங்களை தயாரித்த ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகுமார் கூறும்போது ‘இந்தக் கதையை நான் கேட்கும் போதே இந்த படம் ரசிகர்கள் இடையே எவ்வளவு வரவேற்பு பெரும் என்பதை நிர்மாணித்துக் கொண்டேன்.
இப்போதைய தமிழ் சினிமாவில் ஜி வி பிரகாஷ் குமார் அளவுக்கு இந்த பாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்தி இருப்பார்களோ தெரியாது. கதாநாயகனாக அவரது முதல் படமான ‘டார்லிங்’ வெற்றிப் பெற்றது எங்களுக்கு கூடுதல் பலமாகும்.
‘கயல்’ மூலமாக ஆனந்தி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பு பெற்றதை தொடர்ந்து இந்த படத்தில் அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்தோம். இந்த படம் அவரை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டும். குறுகிய கால தயாரிப்பான ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ இளைஞர்களை கவரும் படம் என்பதில் சந்தேகம் இல்லை’ என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment