Wednesday, January 21, 2015
லட்சுமி மேனனை தொடரும் கிசுகிசுக்கள். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.
நடிகை லட்சுமிமேனன் எந்த படத்தில் நடித்தாலும், அந்த படத்தின் ஹீரோவோடு கிசுகிசு இணைத்து பேசப்பட்டு வருகிறது. நடிகை லட்சுமிமேனன், எந்த ஹீரோவுடன் நடித்தாலும், தொடர்ந்து இரு படங்கள் அதே ஹீரோவுடன் நடித்து வருவதை இந்த கிசுகிசுக்கு காரணம் என கூறப்ப்டுகிறது.
சசிகுமாருடன் சுந்தரபாண்டியன் மற்றும் குட்டிப்புலி, விஷாலுடன் பாண்டியநாடு மற்றும் நான் சிகப்பு மனிதன், என்று நடித்து வந்த லட்சுமி மேனன் தற்போது கார்த்தியுடன் கொம்பன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சசிகுமார், விஷாலை அடுத்து தற்போது கார்த்தியுடன் லட்சுமிமேனன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லட்சுமி மேனன், கற்பனையாக பரவி வரும் விஷயங்களுக்கு பதில் சொல்லி சொல்லி தான் அலுத்துவிட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்க்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment