Sunday, January 11, 2015

விஜய்க்கு மகன் கொடுத்த அட்வைஸ்: சமூக வலைதளத்திலிருந்து விலக விஜய் முடிவு..!

No comments :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.. சமீபக்காலமாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூகத்தளங்களில் அஜித் ரசிகர்கள் விஜய்யையும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும் சமூகதளங்களில் மாறிமாறி திட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இதைப்பார்த்த விஜய் மகன் சஞ்சய் தன் அப்பாவை இப்படி கலாய்க்கிறார்களே என்று கவலைப்பட்டாராம். பின்பு இதுகுறித்து தனது தந்தையிடம் கூறி இதற்கு ஒரு முடிவு கட்டுமாறு சொன்னாராம். அதன் பின்னர்தான் விஜய் அவருடைய ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளாராம்.
சமூக வலைத்தளங்களில் யாரும், யாருடைய மனதையும் புண்படுத்தாமல் ஸ்டேட்டஸ் போடவேண்டும் என்றும். இனிமேலும் வலைத்தள வன்முறை தொடர்ந்தால் டுவிட்டரில் இருந்து தான் வெளியேறிவிடுவதாகவும் எச்சரித்துள்ளாராம்

No comments :

Post a Comment