Monday, January 12, 2015
விஜய்யை வீழ்த்த சிவகார்த்திகேயன் போட்ட அதிரடி திட்டம் பலிக்குமா? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு,
நேற்று முன் தினம் வெளியான சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை டிரைலர் இந்த அளவுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று சிவகார்த்திகேயன் கூட எண்ணியிருக்க மாட்டார். அவருடைய டிரைலர் விமர்சனத்தை விட அவர் அஜீத் வசனத்தை பேசியது குறித்தும், விஜய் ஸ்டைலை காப்பியடிப்பது குறித்தும் டுவிட்டரில் ஆயிரக்கணக்கான ஸ்டேட்டஸ்கள் குவிந்து வருகிறது.
நான்கு படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவுடன் விஜய் அளவுக்கு ஆசைப்படும் சிவகார்த்திகேயனுக்கு விஜய் ரசிகர்கள் தங்கள் கண்டனத்தையும், அஜீத் ரசிகர்கள் தங்கள் ஆதரவையும் மாறி மாறி தெரிவித்து வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனுஷுண்டன் 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து ஒருசில படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் அவருடைய எண்ணம் அதற்குள் விஜய் இடத்தை பிடிக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது.
மேலும் டுவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக தினமும் ஆயிரக்கணக்கான ஸ்டேட்டஸ்களை அவரே ஆள்வைத்து போட்டு வருவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. விஜய்யை வீழ்த்துவதற்காகவும், ஒரு சுய விளம்பரத்திற்காக அவர் இதை செய்து வருவதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. தன்னை தானே விளம்பரப்படுத்தி கொண்டு விஜய்யை ஓவர்டேக் செய்யும் சிவகார்த்திகேயனின் முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment