Wednesday, January 21, 2015
என் மூடே போச்சு! : பெட்ரூம் சீனில் புலம்பிய நடிகை
நடிக்கிறதுக்குன்னு முடிவோட வந்த பிறகு அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன்னு சொல்ல முடியாது என்று பேட்டி கொடுக்கும் போது சொல்வார்கள் சில நடிகைகள்.

ஆனால் சில கேரக்டர்களை அவர்கள் தவிர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு வந்து விடுவார்கள். இன்னும் சிலரோ சரி பரவாயில்லை கமிட் செய்து விட்டோம். நடித்துத் தொலைப்போம் என்று நடிக்க ஆரம்பிப்பார்கள்.
பாலிவுட் நடிகை மல்லிகா செராவத்தும் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தான் சிக்கியிருக்கிறார்.
பாலிவுட்டில் வில்லன், குணசித்ர கேரக்டர்கள் என்றாலேஓம் புரி தான் பேமஸ். பல வருடங்களுக்கு முன் ‘ஆஸ்தா’ என்ற ஹிந்தி படத்தில் இவர் மாஜி ஹீரோயின் ரேகாவுடன் இணைந்து நடித்த பெட் ரூம் காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடிக்கும் படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’. இதில் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், தனது அழகை காட்டி அரசியல்வாதிகளை மயக்கி தன் வலையில் விழ வைக்கும் கேரக்டர் தான் மல்லிகாவுக்கு. இப்படத்துக்காக தன்னை விட வயதில் மூத்த ஓம் புரியுடன் படுக்கை அறை காட்சிகளில் சமீபத்தில் நடித்தார்.
அந்தக் காட்சியில் நடித்தது பற்றி மும்மை மீடியாக்கள் கேள்விகள் கேட்க ‘பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். ஆனால் ஓம்புரியுடன் நெருக்கமாக படுக்கை அறையில் நடிக்கும் காட்சி எனக்கு வசதியாக அமையவில்லை. நல்லவேளையாக ஓம் புரி தான் என்னிடம் சகஜமாக பேசி எனக்கு தர்மசங்கடமில்லாமல் நடிப்பதற்கான ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுத்தார்’ என்றாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment