Wednesday, January 21, 2015
40 லட்சம் வேணுமாம்! : கொஞ்சம் கருணை காட்டுங்க கருணாகரன் சார்
தமிழ்சினிமாவில் இருக்கும் ஹீரோ பஞ்சத்தில் பல இயக்குனர்கள் புதிய முகங்களைப் போட்டு படமெடுப்பதை விட, ஏற்கனவே தெரிந்த முகமாக இருந்தால் ஓரளவுக்கு வியாபாரத்தில் லாபம் பார்க்கலாமே என்கிற ஆசையில் அவர்களைத் தேடிப் போகிறார்கள்.
இதனால் வடிவேலு, சந்தானம், பாபி சிம்ஹா உள்ளிட்ட காமெடி நடிகர்கள் கூட சீக்கிரத்திலேயே ஹீரோவாகி விடுகிறார்கள்.
கலகலப்பு, பீட்ஸா, சூதுகவ்வும் ஜிகர்தண்டா உட்பட பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்தவர் கருணாகரன்.
தொடர்ந்து கருணா நடித்த பல படங்கள் ஹிட்டானதையடுத்து ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ போலவே நடித்திருந்தார். அந்தப்படம் சுமாராகப் போனாலும் கருணாவைத் தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் கே.எஸ்.ரவிக்குமார் டைரக்ஷனில் ரஜினியின் நண்பராக லிங்கா படத்தில் நடித்தார் கருணாகரன்.
ரஜினியுடன் சேர்ந்து நடித்ததிலிருந்து கருணாவின் மார்க்கெட் இன்னும் ஸ்டெடியாகி விட்டது. அவரும் இதுதான் சரியான சான்ஸ் என்று தனது சம்பளத்தை தடாலடியாக பல லட்சங்கள் ஏற்றிவிட்டாராம்.
இதனால் அவரை காமெடி கேரக்டரில் நடிக்கக் கூப்பிடும் இயக்குனர்கள் கூட கருணா கேட்கும் சம்பளத்தைக் கேட்டு அப்படியே பின் வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் ‘உப்புக்கருவாடு’ என்ற படத்தை இயக்கத் தயாரானார் டைரக்டர் ராதாமோகன். மொழி, அபியும் நானும் போன்ற பல நல்ல தரமான படங்களைத் தந்த ராதாமோகன் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்க கருணாகரனை கேட்டுப் பார்த்திருக்கிறார்.
அவரோ கண்டிப்பா பண்ணலாம், ஆனால் என்னோட சம்பளம் 40 லட்சம் ரூபாய். அதை அப்படியே தந்தீங்கன்னா உடனே ஷூட்டிங் கெளம்பிடலாம் என்று சொன்னாராம்.
பல ஹீரோக்களைக் கேட்டுப் பார்த்தும் தேதிகள் இல்லாததால் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட சம்பளத்துக்கு ஓ.கே சொல்லி அக்ரிமெண்ட்டெல்லாம் போட்டு படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார் ராதாமோகன்.
கருணாகரண் மொத்தமே இதுவரை 17 படங்கள் தான் நடித்திருக்கிறார். அதிலும் ஒரு சில படங்களில் மட்டுமே ரசிக்கும்படியான கேரக்டர்கள் அவருக்கு அமைந்தது. அப்படியிருந்தும் தனது சம்பளத்தை ஒரேடியாக 40 லட்சம் வரை உயர்த்திக் கேட்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘கொஞ்சம் கருணை வையுங்க கருணாகரன் சார்’!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment