Sunday, February 8, 2015

தன்னுடைய உணவை திருடி தின்ற பன்றியை பந்தாடும் காண்டா மிருகம்! வீடியோ இணைப்பு Rhino kills Wild Boar with Single Horn pulse

No comments :

சென்னைப் பெண்களின் அசத்தலான டான்ஸ்! வீடியோ இணைப்பு the Dance floor chennai express

No comments :

ஷமிதாப் 2 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

No comments :
தனுஷுன் இரண்டாவது பாலிவுட் படமான ஷமிதாப் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடித்துள்ளார்.
இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, குறிப்பாக தனுஷ், அமிதாப்க்குமிடையே உள்ள ஈகோ படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்ஸாக பேசப்பட்டு வருகிறது.
இப்படம் வெளிவந்த முதல் நாள் ரூ 3.5 கோடி வசூல் செய்தது, தற்போது இரண்டு நாள் சேர்த்து இப்படம் ரூ 7.80 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகிறது.

என்னை அறிந்தால் படத்திற்கு விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய விமர்சனம்!

No comments :
என்னை அறிந்தால் படத்தை பார்க்க செல்வோர்களை விட, விமர்சனம் செய்ய செல்பவர்கள் தான் அதிகம். அந்த வகையில் சமூக வளைத்தளமான பேஸ்புக்கில் ஒரு விஜய் ரசிகர் ஒருவர் எழுதிய விமர்சனம் ஒன்று வெளிவந்துள்ளது. தற்போது இந்த விமர்சனம் தான் அதிக ஷேர் ஆகி வருகிறது.

விஜய் ரசிகனின் விமர்சனம்:

என்னை அறிந்தால் படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அஜித் என்றால் நம்பிக்கை, உழைப்பு, அபாரம், அழகு. பக்தன் கடவுள் மேலே வைத்துள்ள அன்பை விட ரசிகன் நடிகன் மீது வைத்துள்ள அன்பு பன்மடங்கு பெரியது, பக்தன் கூட கைமாறு கருதி அன்பு வைக்கிறான்… ஆனால் இவர்கள் எதையும் எதிர்பாராமல் வைக்கின்றனர்.

இந்த நடிகன், ரசிகனுக்கு இடையே உள்ள அன்பை புரிந்துகொள்ள நீங்கள் முதல் நாள் முதல் காட்சி போய் பாருங்கள் புரியும்.  நான் பார்த்தேன் படத்தை மட்டுமல்ல அஜித்தின் பக்தர்களையும், படத்திற்க்கு மதிப்பெண் போடலாம். பக்தர்களின் அன்புக்கு முடியாது. சின்ன வேண்டுகோள், பாலபிசேகம் செய்து உங்கள் அன்பை காட்டாதிர்கள், பதிலாக அந்த பாலை அனாதை குழந்தைகளுக்கு கொடுங்கள். அஜித் அவர்களும் இதைதான் விருபுவார். இது விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்துதான்…

இப்படிக்கு விஜய் ரசிகன்…. என்று தன் விமர்சனத்தை அட்வைஸுடன் முடித்துள்ளார்.

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் அஜித் ராஜ்ஜியம்! முழு விவரம்

No comments :
அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தற்போது என்னை அறிந்தால் அமெரிக்காவில் 3 நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் 04.02.2015 பிரிமியர் ஷோவில் $113K, 05.02.2015 அன்று $120K, 06.02.2015 அன்று $129K வசூல் செய்துள்ளதாம்.
இதுவரை மொத்தம் $415k வசூல் செய்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ 2.58 கோடி வசூலானது என கூறப்பட்டுள்ளது. இன்னும் வரும் நாட்களில் பல படத்தின் வசூலை இப்படம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறப்படுகிறது.

நடிக்க வேண்டும் என்றால் படுக்க அழைப்பார்கள் : நடிகை ஆதங்கம்

No comments :
மூன்று பேர் மூன்று காதல், ஜெய்ஹிந்த்-2 போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுர்வீன் சாவ்லா. இவர் தமிழை தவிர இந்தியிலும், தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் பாலிவுட்டில் ’ஹேட் ஸ்டோரி-2’ என்ற படத்தில் பயங்கர செக்ஸியாகவும், கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பேட்டி அளிக்கையில், பட வாய்ப்பு தருவதாகக் கூறி, படுக்கைக்கு அழைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு சிலர் கேட்பதையும், அதை அவர் சமாளிப்பதையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நடிக்க வந்து நான் இங்கு நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சில அனுபவங்கள் இன்றும் ஆறாமல் இருக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக வேறு மாதிரி ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளச் சொன்னவர்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் அதிகம்.
ஆனால் இப்போது நான், அநாகரிக விண்ணப்பங்களை என் போக்கில் எப்படிக் கையாளுவது என்று கற்றுக்கொண்டிருக்கிறேன். திரையுலகில் ஒரு நடிகர் அல்லது நடிகையின் திறமையைப் புரிந்து அதற்கேற்ற பாத்திரங்களைத்தான் தருகிறார்கள். வெறும் கவர்ச்சி மட்டும் காட்டச் சொன்ன பல வாய்ப்புகளை நான் நிராகரித்திருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

Thursday, February 5, 2015

மது வாங்கும் காட்சி விவகாரம்: சர்ச்சையில் நயன்தாரா பிரியா ஆனந்த் ஆவேசம்…

No comments :
நயன்தாரா நடிக்கும் படம் ‘நானும் ரவுடிதான்’ . இப்படத்துக்காக மது கடைக்கு சென்று மது வாங்கும் காட்சியில் நடித்தார் நயன்தாரா. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்காட்சிக்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மது கடையில் ஒரு பெண் மது வாங்குவதுபோல் காட்டுவது பெண்களை
இது குறித்து நயன்தாரா கூறும்போது, ‘இது படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. அவ்வளவுதான்’ என குறிப்பிட்டார். பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறும்போது, ‘எதற்காக இவ்வளவு பெரிய விஷயமாக இதை மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.
இழிவுபடுத்துவதுபோல் உள்ளது. குறிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நயன்தாராவை குறிவைத்து இதுபோல் போராட்டம் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காட்சிக்கு ஏற்றபடி இயக்குனர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதைத்தான் நடிகர், நடிகைகள் செய்கின்றனர். அதுபோல் இதுவும் ஒரு காட்சி அவ்வளவுதான். இயக்குனர்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது. இக்காட்சி ஏன் இடம்பெறுகிறது என்பதை படம் பார்த்தால் தெரியவரும்‘ என்றார்.இது பற்றி கருத்து தெரிவித்த நடிகை பிரியா ஆனந்த், ‘சம்பளம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்கிறோம். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் வேலை. சிகரெட் பிடிப்பதுபோல் நடித்தால் உடனே அந்த நடிகை நிஜத்திலும சிகரெட் பிடிப்பார் என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட காட்சி ஏன் படத்தில் இடம்பெறுகிறது என்பது படம் பார்க்கும்போது புரியும்’ என்றார்.

என்னை அறிந்தால் படம் பற்றி சிம்புவின் வித்தியாசமான ட்வீட்…

No comments :
அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் படம் என்னை அறிந்தால்.
இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் பிரபலங்களில் சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகன் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இன்று படத்தை பார்த்த சிம்பு, ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன்.
தல அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர் முடிவு…

No comments :
ரஜினிகாந்த் பெயரிலான பட தலைப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் பட தயாரிப்பாளர்.தமிழில் பல்வேறு
படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் ஆதித்ய மேனன். இவர் நடிக்கும் இந்தி படம் ‘மைன் ஹுன் ரஜினிகாந்த்‘. பைசல் சைப் இயக்கி உள்ளார். இப்படத்தை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘எனது இமேஜையும், மக்களிடம் எனக்குள்ள மரியாதையையும் கெடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கிளிப்பிங்க்ஸ், தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை பார்த்தபோது இந்த விவரம் தெரியவந்தது. எனவே இப்படத்துக்கு என் பெயரை பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்’ என கேட்டிருந்தார். அதை ஏற்று படத்துக்கு இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கில் ரஜினிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்ல தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி இயக்குனர் பைசல் சைப் கூறியதாவது:இப்படத்தின் கதாபாத்திரத்துக்கு ஏற்பவே படத்தின் தலைப்பு வைக்கப்பட்டது. கதையும் ஹீரோவை சுற்றியே நகர்கிறது. ஒரு இயக்குனர் கதாசிரியராக ரஜினியின் மனதை மேலும் புண்படுத்த நான் நினைக்கவில்லை. படத்தின் தலைப்பை மாற்றவே நான் நினைக்கிறேன். ஆனாலும் பட தயாரிப்பாளர் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் எடுத்து செல்ல விரும்புகிறார். அதை என்னால் தடுக்க முடியாத நிலை உள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த மோதலை தொடர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

இந்திக்கு போகிறார் ஷங்கர் …

No comments :
ஐ’ படத்தை அடுத்து இந்தியில் படம் இயக்க இருக்கிறார் ஷங்கர்.இயக்குனர் ஷங்கர், அவர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். தமிழில்
அர்ஜுன் நடிப்பில் ஹிட் ஆன இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அனில் கபூர், ராணி முகர்ஜி ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தை அடுத்து இந்திப் படம் இயக்கவில்லை. பிறகு ‘ரோபோ’ படத்தை ஷாரூக்கான் நடிப்பில் இயக்க இருந்தார். இதில் இரண்டு பேருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகக் கூறப்பட்டது. அடுத்து அந்தக் கதையை ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ‘எந்திரன்’ என்று இயக்கினார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதை அடுத்து விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ‘ஐ’ படத்தை இயக்கினார். ‘இந்தப் படத்தை அடுத்து இந்தியில் படம் இயக்க இருக்கிறார் ஷங்கர். பெரிய பட்ஜெட் என்பதால் தமிழில் அதற்கான தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். அதனால் இந்தியில் இயக்க இருக்கிறார். மற்ற விஷயங்கள் இன்னும் சில மாதங்களில் தெரியும்’ என்று ஷங்கர் தரப்பில் கூறப்படுகிறது.